காளஹஸ்தியில் ஒரே இடத்தில் அருள்பாலித்த ஏழு கங்கையம்மன்கள்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2023 11:12
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா (புதன்கிழமை) வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆட்டம், பாடல்களுடன் அம்மன்கள் வீதி உலா வந்தனர். இன்று(புதன்கிழமை ) நள்ளிரவுக்குப் பிறகு (வியாழக்கிழமை)அம்மாயார்களின் நிமஞ்சன (கரைசல்) நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவடைகிறது.
விழாவை முறையிலுமா பக்தர்கள் பாதுகாப்புக்கும் எந்த வித குந்தகம் ஏற்படாமல் இருக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். பொதுவாக கோடை காலத்தில் கங்கையம்மன் திருவிழாக்கள் மற்ற அனைத்து பகுதிகளிலும் நடைபெறும். ஆனால் வேறு எங்கும் இல்லாத வகையில், ஸ்ரீகாளஹஸ்தியில் டிசம்பர் மாதத்தில் ஏழு கங்கை அம்மன் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஸ்ரீகாளஹஸ்தி நகரின் ஏழு பகுதிகளில் எழுந்தருளும் கங்கை அம்மன்கள் ஒன்றாக ஊர்வலமாக ஒரேல் எழுந்தருளினர். இந்த திருவிழா தலைமுறை தலைமுறையாக நடந்து வருகிறது. ஏழு கங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் திருமண மண்டபம், பேரிவாரி மண்டபம், ஜெயராம் ராவ் வீதி, சன்னிதிவீதி, பிராமணவீதி(தேர் வீதி) காந்திவீதி, கொத்த பேட்டை ஆகிய இடங்களில் அம்மன்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 7 திருவிழாக் குழுவினர் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு வடிவங்களில் அம்மன்களின் சிலைகளை அலங்கரித்திருந்தனர். அந்தந்த ஏழு பகுதிகளில் மின் விளக்குகளாலும் சிறப்பு மலர்களாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. வண்ண மின் விளக்குகளின் ஒளியில் அம்மன்கள் ஜொலித்தனர். முன்னதாக, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள ஏழுகங்கையம்மன் கோயிலில் ஏழு அம்மன்களின் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் ஏழு அம்மன் சிலைகளில் இருந்த திரைகள் அகற்றப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் வழங்கப்பட்டது. அங்கிருந்து திருமண சிவன் கோயில் திருமணமண்டபம் நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலமாகச் சென்றன அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த ஊர்வலம் 7 பகுதிகளுக்குச் செல்ல சுமார் 3 மணி நேரம் ஆனது காலை 7 மணிக்கு ஏழு கங்கை அம்மன்கள் 7 பகுதிகளுக்குச் சென்றடைந்து, அங்கும் சிறப்பு பூஜைகள் செய்தனர். ஸ்ரீகாளஹஸ்தி நகர மக்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் கும்பத்தை காணிக்கையாக செலுத்தியும் ஆடு, மற்றும் சேவல் ஆகியவற்றை பலி கொடுத்து அம்மன்களுக்கு பொங்கல் வைத்தும் தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்த பூஜைகள் முடிந்து இரவு 9 மணி முதல் மீண்டும் ஏழு அம்மன்கள் ஊர்வலமாக முத்யாலம்மன் கோயில் வீதியில் உள்ள ஏழுகங்கையம்மன் கோயிலை வந்தடைந்தன. அங்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த நிமஞனத்துடன் ஏழு கங்கை அம்மன் திருவிழா நிறைவு பெற்றது. இந்நிலையில், திருவிழாவின் போது கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதில் ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டு கங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏழு கங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.