காட்டுப் பகுதியில் சோழ கால சிவலிங்கம் கண்டெடுப்பு; கங்கை தீர்த்தத்தால் சுத்தம் செய்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2023 12:12
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே, ரகுநாதபுரம் கிராம காட்டுப்பகுதியில் பழமையான சிவலிங்கம் புதைந்து கிடப்பதாக, பார்த்திபன் என்பவர் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த முருகபிரசாத் என்பவருக்கு தகவல் அளித்தார். அதன்படி, அவர் அப்பகுதியில், கள ஆய்வு நடத்தினார். அப்போது அது, ஒன்பதாம் நூற்றாண்டு பராந்தக சோழமன்னர் காலத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பது தெரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த, சேலத்தை சேர்ந்த சிவாச்சாரியார்கள் 10 பேர், ரகு நாதபுரத்துக்கு வந்து, சிவலிங்கத்தை மீட்டு, கங்கை தீர்த்தத்தால் சுத்தம்செய்தனர். பின், அதே இடத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்காக, வேத மந்திரங்களை ஓதி பூஜைகளை நடத்தினர். இந்த பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.