பதிவு செய்த நாள்
09
டிச
2023
10:12
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை மலை உச்சியிலிருந்து ராட்சத மகா தீப கொப்பரை இறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீப திருவிழாவில், கடந்த, 26ம் தேதி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. காடா துணியால் ராட்சத திரி தயாரிக்கப்பட்டு, 6 அடி உயர கொப்பரையில் ஏற்றப்பட்ட மஹா தீபம், 40 கி.மீ., துாரம் வரை தெரிந்தது. கடந்த, 11 நாட்களாக எரிந்தது. திருவிழா நிறைவுபெற்றத்தையொட்டி, மலை உச்சியிலிருந்து ராட்சத மகா தீபக் கொப்பரை இறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். மகா தீப கொப்பரையில் சேகரிக்கப்படும் தீப மை பிரசாதம், 27ம் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று, சிவகாமி சமேத நடராஜருக்கு முதலில் சாற்றப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.