திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா; பாதுகாப்பு குறித்து காவல்துறை டி.ஜி.பி.ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2023 05:12
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி பாதுகாப்பு குறித்து புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி. பிரிஜேந்திரகுமார் யாதவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யோஸ்வரர் கோவிலில் தனிச்சன்னதியில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். இக்கோவில் இரண்டரை ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா மிகவிமர்ச்சியாக நடைபெறுவது வழக்கம் வரும் 20ம் தேதி சனிபெயர்ச்சி திருவிழா முன்னிட்டு பகவான் மகர ராசியிலிருந்து கும்பராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர். இப்பணிகளை புதுச்சேரி காவல் துறை டி.ஜி.பி. பிரிஜேந்திரகுமார் யாதவ் தலைமையில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து வாகன நிறுத்துமிடம், வரிசை வளாகம், நுழைவு வாயில், சிசிடிவி. கண்கணிப்பு பகுதி, அவசரவழிகள், குற்றங்களை தடுக்கும் நடவடிக்கை, மக்களுடன் கலந்து போலீசார் தீவிர கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு குறித்து காவல்துறை டி.ஜி.பி.அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.ஆய்வில் சீனியர் எஸ்.பி.(பொறுப்பு) நிதின் கவுகால் ரமேஷ்.எஸ்.பி.சுப்ரமணியன். இன்பொக்டர் அறிவுசெல்வம். கிரிஸ்டின்பால் உள்ளிட்ட போலீசார் பலர் உடன் இருந்தனர்.