மதுரை; அலங்காநல்லூரில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தின் அருங்காட்சியகத்திற்கு உசிலம்பட்டி பகுதியில் காணப்படும் வீரம் செறிந்த புலிகுத்தி நடுகல்லை காட்சிப்படுத்த அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
உசிலம்பட்டி நல்லுத்தேவன்பட்டி மலையடி வாரத்தில் உள்ள வனப்பகுதியில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான, 8 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட புலி குத்தி நடுகல் உள்ளது. மேல் பாகத்தில் குதிரையில் செல்லும் வீரனும், அடியில் வீரன் புலியை குத்திக் கொள்வது போலவும் நடுகல்லில் காட்சிப்படுத்தியுள்ளனர். இதனை அலங்காநல்லூரில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதான அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த கொண்டு செல்ல உசிலம்பட்டி வருவாய்த் துறை, வனத்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இந்த பகுதி மக்களிடம் ஆலோசனை கேட்டு நடுகல்லை கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.