Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் பகல் ... அயோத்தி ராமர் கோயிலில் ஒலிக்க நாமக்கல்லில் தயாராகும் 108 மணிகள் அயோத்தி ராமர் கோயிலில் ஒலிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாச்சேத்தியில் 21 அடி உயரம், 400 கிலோ எடையில், கோயிலுக்கு தயாராகும் ராட்சத அருவா
எழுத்தின் அளவு:
 திருப்பாச்சேத்தியில்  21 அடி உயரம், 400 கிலோ எடையில், கோயிலுக்கு தயாராகும் ராட்சத அருவா

பதிவு செய்த நாள்

14 டிச
2023
07:12

திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தியில் பக்தர்கள் கோயில்களுக்கு நேர்த்திகடனாக செலுத்தும் ராட்சத அருவாவை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

அருவா விற்கு பெயர் பெற்ற திருப்பாச்சேத்தி நகரமாகும், எடை குறைவாகவும், கூர்மையாகவும் தயாரிக்கப்படும் திருப்பாச்சேத்தி அருவாவிற்கு தமிழத்தில் தனி மவுசு உண்டு. திருப்பாச்சேத்தியில் மாசி மாதம் பிறக்க உள்ளதையடுத்து அய்யனார் மற்றும் கருப்பண்ணசாமி கோயில்களுக்கு நேர்த்தி கடன் அருவா தயாரிக்கப்படுகிறது. குழந்தை வரம், திருமண வரம் வேண்டி வழிபடும் பக்தர்கள் ஊரை காவல் காக்கும் தெய்வங்களுக்கு அருவா நேர்த்தி கடன் செலுத்தவதாக வேண்டி கொள்வார்கள்.அவர்களுக்காக ஐந்து அடி முதல் 21 அடி உயரம் கொண்ட அருவா தயாரிக்கப்படுகிறது. மதுரையில் இருந்து பழைய கனரக வாகனங்களின் இரும்பு பட்டாக்களை வாங்கி வந்து பட்டறையில் நெருப்பில் இட்டு தட்டி தட்டி அருவா தயாரிக்கின்றனர். ராட்சத அருவாவின் எடையை பொறுத்து வேலை செய்யும் நாட்கள் அதிகரிக்கும், அருவா தயாரித்த பின் அதனை சிமெண்ட் தூணில் நிலை நிறுத்த வசதியாக கீழ்புறமும் மேற்புறமும் தனித்தனி துளைகள் இடுகின்றனர். அருவாவின் உட்புறம் மணிகளும் கட்டப்படுகின்றன. திருப்பாச்சேத்தியில் உள்ள அருவா பட்டறையில் கட்டனூரில் கட்டப்பட்டு வரும் கருப்புச்சாமி கோயிலுக்காக 400 கிலோ எடையிலும் 21 அடி உயரத்திலும் ராட்சத அருவா தயாரிக்கப்படுகிறது. கடந்த 15 நாட்களாக மூன்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து இந்த அருவாவை தயாரித்துள்ளனர். வெயிலிலும் மழையிலும் தாக்குபிடிக்கும் வண்ணம் துருப்பிடிக்காத பெயிண்ட் பூசப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் விஜயகுமார் கூறுகையில் : ராட்சத அருவா பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. தனித்தனி இரும்பு தகடுகள் வாங்கியும் ஒரே தகடு கொண்டும் அருவா தயாரிக்கப்படுகிறது. மற்ற அருவாக்களை காட்டிலும் நேர்த்தி கடன் அருவா தயாரிப்பதில் வேலைப்பளு அதிகம். இந்த அருவா 21 அடி உயரம், 400 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது.இதனை தயாரிக்க ரூபாய் 80ஆயிரம் வரை செலவாகும். சாதாரணமாக சிறிய வேன் எதிலும் கொண்டு செல்ல முடியாது. லாரி போன்ற கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கிரேன் மூலம் நிலை நிறுத்தப்பட உள்ளது. இன்னும் ஒருசில மாதங்களில் மாசி பிறக்க உள்ளது. மாசி மாதங்களில் சிவன்ராத்திரி உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் அதிகளவு நேர்த்திகடன் அருவா வாங்கி செல்வார்கள், என்றார். திருப்பாச்சேத்தி உள்ள பட்டறைகள் பெரும்பாலும் ரோட்டை ஒட்டியே அமைந்துள்ளன. ராட்சத அருவா தயாரிக்கப்பட்டு வருவதை அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பலரும் வேடிக்கை பார்த்தபடியே சென்று வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் பிலாஸ்பூர் ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் சச்சிதானந்த தீர்த்த ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar