பதிவு செய்த நாள்
15
டிச
2023
11:12
சித்திரை 3, 4 பாதம்: சொந்த முயற்சியில் முன்னுக்கு வரக் கூடிய ஆற்றல் உடைய உங்களுக்கு இந்த மாதம் திடீர் கோபம் உண்டாகும். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத் தில் மன நிறைவு காண்பீர்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான நிகழ்வுகூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் பிரச்னை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத் தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும். பெண்களுக்கு கோபகத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரி யமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.
பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர் பார்த்த நிகழ்வுகள்நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.
சந்திராஷ்டமம்: டிச. 24, 25
அதிர்ஷ்ட நாள்: ஜன. 11, 12
சுவாதி: உழைப்பு, செயல்திறன், பேச்சு ஆகிய வற்றில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் உங்களுக்கு இந்த மாதம் பலவகையான யோகத்தை தரும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக் கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வ தில் உற்சாகம் உண்டாகும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர் கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும். மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்க ளில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.
பரிகாரம்: வாராகியை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்னைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 25, 26
அதிர்ஷ்ட நாள்: ஜன. 12, 13
விசாகம் 1, 2, 3 பாதம்: பிறர் மதிக்கும்படி நடந்துகொள்ளும் நீங்கள் சுயமாக சிந்தித்து செயலாற்றும் திறமை பெற்றவர். உங்களுக்கு இந்த மாதம் பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்கு றுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல் படுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தா லும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப் பது தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வி யில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங் களில் ஈடு படாமல் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படலாம். கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் நிகழ்வுகள்சாதகமான பலன் தரும். விவசாயிகளுக்கு எதிலும் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: நவக்கிரகத்தை வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.
சந்திராஷ்டமம்: டிச. 26, 27
அதிர்ஷ்ட நாள்: டிச. 17; ஜன. 13, 14