பதிவு செய்த நாள்
22
அக்
2012
10:10
தாடிக்கொம்பு: அகரம் முத்தாலம்மன் கோயில் விழா அக்., 14 ல் சாட்டுதலுடன் துவங்கியது. உற்சவ அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி, கொலு மண்டபம் வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று காலை 10 மணிக்கு அம்மன் கண் திறப்பு வைபவமும், ஆயிரம்கண் சப்பரத்தில் எழுந்தருளி, கொலு மண்டபம் வந்தடையும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து மாவிளக்கு, தீச்சட்டிஎடுத்தல், கரும்பு தொட்டில் ஆகிய பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு கொலு மண்டபத்திலிருந்து, வாணவேடிக்கை மண்டபத்திற்கு எழுந்தருளி, இரவு முழுவதும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும்.அகரம் பேரூராட்சி தலைவர் தமிழரசி, துணைத் தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் பாபுஜி, தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் அன்புச்செல்வி, துணைத் தலைவர் சுப்பிரமணி, செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் ஆகியோர் தலைமையின் இரண்டு பேரூராட்சிகளை சேர்ந்த பணியாளர்கள் குடிநீர் மற்றும் சுகாதாரப்பணிகளை செய்து வருகின்றனர்.