திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியர்களின் அராஜக போக்கை கண்டித்து இந்து முன்ணனி சார்பில், கோவில் ராஜ கோபுரம் முன்பு நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் அருண் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கோவிலில் பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்பும் கோவில் ஊழியர்கள், பெண் பக்தர்களிடம் அடாவடித்தனமாக செயல்படுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோவிலில் பெண் இன்ஸ்பெக்டர் தாக்கிய விவகாரத்தில், போலீசார் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து பெண்களிடம் அடாவடியாக செயல்படும், கோவில் ஊழியர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.