புல்மேடு வழியாக சபரிமலை சென்ற பக்தர்கள்; மண்டல கால அளவில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2023 11:12
மூணாறு; கடந்த டிச.27ல் நிறைவு பெற்ற மண்டல கால பூஜை அளவில் புல்மேடு காட்டு வழியாக 72,047 ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்றனர்.
இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சத்திரம் புல்மேடு வழியாக காட்டு வழியில் சபரிமலைக்கு ஐய்யப்ப பக்தர்கள் சென்று வருகின்றனர். சபரிமலையில் மண்டல பூஜை முடிந்து மகரவிளக்கு பூஜைக்கு இன்று நடை திறக்கப்படுகிறது. டிச.27ல் நிறைவு பெற்ற மண்டல பூஜை கால அளவில் சத்திரம் புல்மேடு காட்டு வழியில் சபரிமலைக்கு 72,047 பக்தர்கள் நடந்து சென்றனர். இதே கால அளவில் கடந்தாண்டு 34,094 பக்தர்கள் சென்றனர். இது கடந்தாண்டை விட 37,953 பக்தர்கள் அதிகமாகும். இந்தாண்டு மிகவும் அதிகமாக டிச.23 ல் 6,078 பக்தர்கள் சென்றனர். பம்பை வழியாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் புல்மேடு வழியை பக்தர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். புல்மேடு வழியாக பயணம் மிகவும் கடினம் மண்டல பூஜை கால அளவில் மூன்று பக்தர்கள் இறந்தனர். தவிர பக்தர்களின் வருகைக்கு ஏற்ப சத்திரம் பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடவசதி உள்பட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இன்றி பக்தர்கள் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர். மகரவிளக்கு காண பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் சத்திரம், பல்மேடு ஆகிய பகுதிகளில் இடுக்கி மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.