பதிவு செய்த நாள்
01
ஜன
2024
01:01
பழநி; பழநி முருகன் கோவிலுக்கு ஆங்கில புத்தாண்டு, பாதயாத்திரை,ஐயப்ப பக்தர்கள் கூட்டம் இருந்தது.
பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர், வெளி மாநில அதிக பக்தர்கள் வருகை புரிந்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பாதயாத்திரை, ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தனர். மலைக்கோயிலில் பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயில் செல்ல, வின்ச், தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். பக்தர்கள் காவடி எடுத்து அழகு குத்தி ஆட்டம் பாட்டத்துடன் வந்தனர்.
பழநி கோயில் கிரிவிதி, அடிவாரம் பகுதிகளில் பேன்சி கடைகள், தட்டு கடைகள், பூஜை சாமான் கடைகள் ஆகியவை உள்ளன. இப்பகுதிகளில் கடைகள் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. ஆக்ரமிப்பை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும். கோயில் நிர்வாகம்,நகராட்சி, வருவாய் துறையினர் இணைந்து தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை செய்து வந்தால் ஆக்கிரமிப்புகள் கட்டுப்படுத்தப்படும். சுற்றுலா வாகன பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தாமல் கிரிவீதியில் வாகனங்களை நிறுத்துவதால் சிரமம் பக்தர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் பூங்காரோடு, கிரிவீதியில் கூட்டம் அதிகம் உள்ள போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அய்யம்புள்ளி ரோடு, அருள்ஜோதி வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரோப்கார், வின்ச் நிலையங்கள் அருகே அருகே வாகனங்களை நிறுத்த முடியாமல் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.
மலைக்கோயிலில் வெளிப்பிரகாரத்தில் அதிக கூட்டம் இருந்ததால் வெயிலால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். மலைக் கோயிலுக்கு அலைபேசி கொண்டு செல்ல தடை இருந்த போதிலும் சில பக்தர்கள் அலைபேசி எடுத்து வருகின்றனர். காணாமல் போகும் பக்தர்களை கண்டறிய அறிவிப்பு மையங்களை அதிகரிக்க வேண்டும். பாதுகாவலர்களை அதிகரிக்க வேண்டும். நகரில் போலீசார் எண்ணிக்கை அதிகரித்து ரோந்துப் பணிகளையும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் தீவிர படுத்த வேண்டும்.