சென்னை; சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமான வடபழனி முருகன் கோயிலில் புத்தாண்டு பிறப்பை ஒட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். கம்பீரமாக காட்சியளித்த முருகப்பெருமானை பக்தர்கள் மனமுருகி தரிசித்து வருகின்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.