Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ...  ஆண்டில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் புளியல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம் ஆண்டில் ஒரு நாள் மட்டுமே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரே நேரத்தில் 108 இடங்களில் சூரிய நமஸ்காரம்; கின்னஸ் சாதனை.. பிரதமர் மோடி பெருமிதம்
எழுத்தின் அளவு:
ஒரே நேரத்தில் 108 இடங்களில் சூரிய நமஸ்காரம்; கின்னஸ் சாதனை.. பிரதமர் மோடி பெருமிதம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2024
06:01

ஆமதாபாத்: குஜராத்தில் 51 வெவ்வேறு ஊர்களில் 108 இடங்களில் சுமார் 4 ஆயிரம் மக்கள் சூரிய நமஸ்காரம் செய்துள்ளனர். இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த நிகழ்வில் முதல்வர் பூபேந்திர பாகல் பங்கேற்றார். மோதரா சூரியக் கோயிலில் புத்தாண்டு காலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. குஜராத் உள்துறை அமைச்சர் சங்வி,‛‛ இன்று நாட்டிலேயே முதல் உலக சாதனையை குஜராத் படைத்துள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.

சூரிய நமஸ்காரம்; இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் தங்காரிகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நிறையப் பேர் சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனையைப் பரிசோதிக்க வந்துள்ளேன். இதுவரை இத்தகைய சாதனையை யாரும் செய்ததில்லை. மோதராவில் நடைபெற்ற சூரிய நமஸ்கார நிகழ்வைப் பொறுத்தவரை, சுமார் 4 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரத்தைச் செய்துள்ளனர். 51 வெவ்வேறு ஊர்களில் 108 இடங்களில் சுமார் 4 ஆயிரம் மக்கள், சூரிய நமஸ்காரம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி பெருமிதம்; இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: குஜராத் 2024ஐ ஒரு குறிப்பிடத்தக்க சாதனையுடன் வரவேற்றுள்ளது. 108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். நமக்கு தெரிந்தபடி, 108 என்ற எண் நமது கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

அர்ப்பணிப்புக்கு சான்று; அந்த வகையில் மோதரா சூரியன் கோயிலும் அடங்கும். அங்கு அனைவரும் ஒன்று கூடி உலக சாதனை படைத்துள்ளனர். யோகா மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தின் மீதான நமது அர்ப்பணிப்புக்கு இது ஒரு உண்மையான சான்றாகும். சூரிய நமஸ்காரத்தை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதனால் வரும் நன்மைகள் அளப்பரியவை. இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar