காளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கானா துணை முதல்வர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2024 11:01
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டு ஒட்டி கோயிலில் அதிகாலை முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று தெலுங்கானா மாநில துணை முதல்வர் பட்டி விக்ரமார்க் குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோவிலுக்குள் சென்றவர்கள் முன்னதாக சிறப்பு ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபட்டனர் .தொடர்ந்து ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர். இதேபோல் பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் சுமன் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்தவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை சாமி தரிசனம் செய்தார்.