பழநி தைப்பூச பாதையாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2024 10:01
பழநி; பழநி, தைப்பூச திருவிழா ஜன.25 நடைபெற உள்ள நிலையில் வெளியூர் பாதயாத்திரை பக்தர்கள் வருகை மலைக்கோவிலுக்கு அதிகரித்து இருந்தது.
பழநியில் ஜன.25ல் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. வெளியூர், வெளி மாநில பாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் பாதயாத்திரை ஆக வருகை புரிகின்றனர். மலைக்கோயிலில் காலை முதல் வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் திரும்பி வருகிறது. தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயில் வந்த வெளி மாநில வாகனங்கள் இலவச வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பி உள்ளது. அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை முறைப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதயாத்திரை பக்தர்கள் பழநி வரும் வழியில் அடிப்படை வசதிகள் செய்து தர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் தங்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பாதயாத்திரை வரும் பக்தர்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இயக்கும் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்கவும், பக்தர்களுக்கு வழிவிட்டு செல்லவும் வாகன ஓட்டிகள் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். பக்தர்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் ஒளிரும் குச்சிகள் மற்றும் பட்டைகளை பயன்படுத்தி பாதயாத்திரை ஈடுபட வேண்டும்.