பதிவு செய்த நாள்
20
ஜன
2024
05:01
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரின், 64வது நாண் மங்கல விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரின், 64வது நாண் மங்கல விழா, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் முன்னிலை வகித்தார். வேள்வி வழிபாடுகள், சாந்தலிங்க பெருமான் திருமஞ்சனம், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாருக்கு புனித நீராட்டு ஆகிய வழிபாடுகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து, ஆதினம், குரு மூர்த்தங்களில் வழிபாடு செய்து, கொலுக்காட்சியில் எழுந்தருளினார். அதன்பின், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பேரூர் ஆதினத்திடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து, ஆன்மீகம், மருத்துவம், சமூகம், ஊடகம், நடனம், ஓவியம் என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும், 64 பேருக்கு, விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னம்பாலிப்பு நடந்தது.