Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுஷ்கோடியில் பிரதமர் மோடி யாக பூஜை சபரிமலையில் இன்று நடை அடைப்பு சபரிமலையில் இன்று நடை அடைப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி கும்பாபிஷேகம்; இது ராம பக்தியின் துவக்கம் அல்ல.. பழந்தமிழரின் தொடர்ச்சி!
எழுத்தின் அளவு:
அயோத்தி கும்பாபிஷேகம்; இது ராம பக்தியின் துவக்கம் அல்ல.. பழந்தமிழரின் தொடர்ச்சி!

பதிவு செய்த நாள்

21 ஜன
2024
08:01

திருமாலின் தசாவதாரங்களில், சிறப்பு வாய்ந்தது ராமாவதாரம். கம்பர், நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே என, ராம வழிபாட்டை சிறப்பிக்கிறார். ராமாயணமும், மகாபாரதமும், நம் நாட்டின் இரு கண்களாக கருதப்படுகின்றன. எனினும், மனிதன் வாழ வேண்டிய முறைகளை வாழ்ந்து காட்டி உணர்த்துவது ராமாயணம். ராமாயண கதையை சொல்லும் வழக்கம், பழங்காலத்தில் இருந்தே தமிழகத்தில் தொடர்கிறது. ராம வழிபாட்டின் தொன்மையை கோவில் கல்வெட்டுகளிலும் காண முடிகிறது. பாண்டியர் காலத்தில் வெட்டப்பட்ட ஸ்ரீவில்லிபுத்துார் கோவில் கல்வெட்டில், சேரனை வென்றான் சதுர்வேதி மங்கலம் என்ற ஊர்ப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், ராமாயண சொற்பொழிவாற்ற, ராமாயண விருத்தி என்ற பெயரில், நிலம் தானம் அளித்த செய்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் புள்ளலுார் அயோத்தி பெருமாள் கோவிலில், மகாபாரத சொற்பொழிவுக்காக, பாரத விருத்தி என்ற பெயரில், நிலம் தானம் அளித்த செய்தியும்உள்ளது. அதேபோல, சோழ மன்னர்களான முதலாம் ராஜாதி ராஜா, இரண்டாம் ராஜேந்திரன் காலத்தில் வெளியான, திருவிந்தளூர் செப்பேட்டிலும், ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் உரையாற்ற நிலதானம் அளிக்கப்பட்ட செய்தி உள்ளது.

சக்கரவர்த்தி திருமகன்; தமிழகத்தில் ராமர் கோவில்களில் உள்ள திருமேனிக்கு, திரு அயோத்தி ஆழ்வார், ராகவச் சக்கரவர்த்தி, கருணாகரன், சக்கரவர்த்தி திருமகன் என்ற சிறப்பு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜயநாராயணம், சேரன்மகாதேவி, பிரம்மதேசம் மற்றும் புள்ளலுார், ஆலங்குடி, சிறுதாவூர், எண்ணாயிரம், வடமதுரை, ஸ்ரீவில்லிபுத்துார், திருக்கோவிலுார், படவேடு, நெடுங்குணம் மற்றும் கும்பகோணம் ராமசாமி கோவில் உள்ளிட்ட இடங்களில், ராம வழிபாடு சிறப்பாக நடந்துள்ளது.

அயோத்தி ஆழ்வார்; காஞ்சிபுரம் அருகேயுள்ள உத்திரமேரூர் கோவிலில், பார்த்திவேந்திரவர்மனின் மனைவியருள் ஒருத்தியான வில்லவன் மாதேவி, ஸ்ரீ அயோத்தி பெருமாள் கோவிலை கட்டி, ராமரின் உற்சவ திருமேனியையும் செய்தளித்தாள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. ராவணன் மறைவுக்கு பின், ராமன், அயோத்திக்கு செல்லும் வழியில், மதுராந்தகம் தலத்தில் விபண்டக முனிவருக்கு காட்சி கொடுத்ததாக புராண வரலாறு கூறுகிறது. அப்போது, சீதையின் இடது கையை தன் வலது கையால் பற்றியவாறு திருக்கல்யாண கோலத்தில் காட்சி தந்ததாக கூறுவர். அந்த காட்சியிலேயே, இங்கு திருமேனிகளின் வாயிலாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த ராமனுக்கு, அயோத்திய பெருமான், திரு அயோத்தி கருணாகர பெருமாள் என்ற பெயர்கள், கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேபோல, ராமாயணத்தை எழுதிய வால்மீகிக்கு, சென்னை அருகில் உள்ள திருநீர்மலையில் நீர்வண்ணப்பெருமாள், கல்யாணராமனாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. அங்கும், வலதுபக்கம் மணக்கோலத்தில் சீதையும், இடதுபக்கம் லட்சுமணனும் சூழ, கல்யாணராமர் அழகாக உள்ளார். கல்யாணராமர் என்பதால் இங்கு அனுமன் இல்லை.

தஞ்சாவூர் மாவட்டம் வடுவூரில் உள்ள ராமர் கோவிலுக்கு, தட்சிண அயோத்தி என்று பெயர். வடமதுரை, ஸ்ரீவில்லிபுத்துார் கோவில்களில் ராமனுக்காக கட்டப்பட்ட கோவில்களில், வழிபாட்டில் இருக்கும் திருமேனிகள், திரு அயோத்தி சக்கரவர்த்தி, திரு அயோத்தி விண்ணகர் ஆழ்வார் என்ற சிறப்பு பெயர்கள், கல்வெட்டுகளில் உள்ளன.

ராமாயண சிற்பங்கள்; முற்கால சோழர்கள் கட்டிய கோவில்களின் அதிட்டானப் பகுதியில், ராமாயண காட்சிகள் சிற்பங்களாக உள்ளன. தஞ்சாவூருக்கு அருகில் உள்ள புள்ளமங்கை, குடந்தை நாகேஸ்வரசுவாமி கோவில், திருச்சி அருகே உள்ள லால்குடி கோபுரப்பட்டி கோவில் உள்ளிட்டவற்றில், ராமாயண காட்சிகள் சிறுசிறு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

முதலாம் ஆதித்த சோழன், கோதண்டராமன் என்ற பெயரால் சிறப்பிக்கப்பட்டு உள்ளான். இவன் கட்டிய கோவில்களிலும், பிற்கால சோழர்கள் கட்டிய திரிபுவனம் கோவிலிலும், ராமாயண காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர்களை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த விஜயநகர, நாயக்கர் காலக்கோவில் துாண்களிலும் அதிகளவில் ராமாயண சிற்பங்கள் உள்ளன. மதுராந்தகம், தில்லைவிளாகம், வடுவூர், குடந்தை ராமசாமி கோவில், படவேடு, நெடுங்குணம், திருப்புட்குழி, திருப்புல்லாணி உள்ளிட்ட இடங்களில், ராமரருக்கு தனிக்கோவில்களே உள்ளன.

மன்னர்கள் ஈடுபாடு; தமிழக மன்னர்கள் ராமரை வழிபட்டதுடன், தங்களின் பெயர்களிலும் ராமனின் பெயரை இணைத்துக் கொண்டனர். பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் இலங்கை நகரை கைப்பற்றியதைக் குறிப்பிடும் போது, இலங்காபுரி தகனம் செய்த ஸ்ரீராமன் என்று தன்னை புகழ்ந்து கூறிக் கொள்கிறான். தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கர், அறத்தின் மூர்த்தியான ராமனின் கதையை எப்போதும் கேட்டு மகிழ்வார். அதனால், அநவரத ராம கதாம்ருத சேவகன் என, தன்னைப் பெருமையுடன் கூறிக்கொள்கிறார்.

திருக்கண்ணமங்கை கோவில் திருப்பணிகளை செய்ததுடன் ராமநவமி அன்று அத்திருக்கோவிலுக்கு வந்து வழிபடுவதையும் வழக்கமாக கொண்டிருந்ததை, திருக்கண்ணமங்கை செப்பேடு கூறுகிறது. செப்பேட்டின் இறுதியில், தெலுங்கில், ஸ்ரீராம நிவேகதி என்றும் ஸ்ரீராம ஜெயம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

பட்டாபிஷேக சிற்பம்; குடந்தையில் உள்ள ராமசாமி கோவில், அற்புத கலைப்படைப்பாய் விளங்குகிறது. கோவிலின் கருவறையில் ராமன் சீதாதேவியுடன் அமர்ந்திருக்க, அருகில் பணிவே உருவமாக லட்சுமணனும் கொற்றக்குடை ஏந்திய பரதனும் நிற்க, வெண்கவரி வீசும் சத்ருக்னனும் உள்ளனர்.

ராமன் முன், சொல்லில் வல்லானாகிய அனுமன் ஓலைச்சுவடி ஏந்தி யாழ் இசைக் கருவியைக் கொண்டு ராமகாதையின் சிறப்பைக் கூறும் அரிய பட்டாபிஷேக காட்சி சிற்பமாக உள்ளது. இக்கோவில் துாண்களில், சுக்ரீவ பட்டாபிஷேகம், விபீஷணன் பட்டாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் அரிய சிற்பங்களாக காட்சி தருகின்றன.

திருவரங்கம் கோவில்; திருவரங்கம் கோவில், ராமரே வழிபட்ட திருக்கோவில் என்ற சிறப்பை உடையது. இக்கோவிலில் ராமருக்கு என பல சன்னிதிகளும், ராமாயணம் தொடர்பான நிகழ்ச்சிகளும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

ஓவியங்கள்; தமிழகத்தில் உள்ள பல கோவில்களில், ராமாயண கதையின் நிகழ்ச்சிகளை விளக்கும் வகையிலான ஓவியங்கள் உள்ளன.

ராமநாதபுரம் ராமலிங்க விலாசம், தர்மபுரி அருகே அதியமான் கோட்டை, திருச்சி அருகேயுள்ள திருவெள்ளறை, ஸ்ரீரங்கம், அழகர் கோவில் வசந்தமண்டபம், புதுக்கோட்டை திருகோகர்ணம் கோவில், கும்பகோணம் அருகேயுள்ள குறிச்சி பெருமாள் கோவில், உடையார்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்டவற்றில் ராமாயண ஓவியங்கள் உள்ளன. செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோவில் மண்டபத்தில் தெலுங்கு ராமாயணமான, ரங்கனாத ராமாயணம் அழகிய ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளதை கண்டு மகிழலாம்.

சிற்பங்கள் - திருமேனிகள்; பல திருக்கோவில் நுழைவாயில் மரக்கதவுகளிலும், தேர் சிற்பங்களிலும் ராமாயண காட்சிகள் உள்ளன. திருச்சேறை, பருத்தியூர், வடக்குப்பனையூர், தில்லைவிளாகம் போன்ற ஊர்களுக்குப் பெருமை அளிக்கும், ராமர் செப்புத்திருமேனிகள், தமிழக கலைச் சிறப்புக்கும், ராமர் வழிபாட்டில் கொண்டிருந்த ஈடுபாட்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன.

அயோத்தி ராமனின் வரலாற்று சிறப்பை கூறும் கம்ப ராமாயணத்தை திருவரங்கம் கோவிலில் உள்ள தாயார் சன்னிதி எதிரே உள்ள நான்கு கால் மண்டபத்தில் தான், கம்பர் அரங்கேற்றினார் என்று கூறுவர். இம்மண்டபம் கம்பர் மண்டபம் என்றே அழைக்கப்படுகிறது.

அறத்தின் வடிவாகத் தோன்றி மனித குலத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ராம அவதாரத்தின் பெருமையை எடுத்துக் கூறும் ராம காதை, தமிழகத் திருக்கோவில்களில் சிறப்பிடம் பெற்று விளங்குவதால், தமிழகத்தில், ராம வழிபாட்டில், மன்னர்களும் மக்களும் தொடர்ந்து ஈடுபட்டதை அறிய முடிகிறது.

சிறப்பிலும் சிறப்பு வாய்ந்த அயோத்தி ராமருக்கு, கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து கலைப்பொக்கிஷமாகவும், வழிபாட்டு பொருட்களாகவும், தமிழக பக்தர்கள் காணிக்கை அளிக்கின்றனர். இது, ராம பக்தியின் துவக்கம் அல்ல; பழந்தமிழரின் தொடர்ச்சி!

கி. ஸ்ரீதரன், முன்னாள் துணை கண்காணிப்பாளர், தமிழக தொல்லியல் துறை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. புதிய ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் 13 ம் தேதி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாதத்தில் ... மேலும்
 
temple news
காரமடை; பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் கைசிக ஏகாதசி வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஒரு ... மேலும்
 
temple news
மேலுார்; கீழவளவு வீரகாளியம்மன் கோயில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 15 நாட்கள் காப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar