அயோத்தி ராமர் கோவில் ஒரு நாள் காணிக்கை ரூ.3 கோடியை தாண்டியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2024 10:01
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டா விழா 22-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டதை அடுத்து கூட்டம் அலைமோதி வருகின்றனர். பிராண பிரதிஷ்டா விழாவிற்குப் பிறகு, உ.பி.யின் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமிக்கு ஏராளமான ராம பக்தர்கள் வந்து செல்கின்றனர். அயோத்தியில் எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. முதல் நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் பக்தர்கள் காணிக்கை அளித்த 10 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 3.17 கோடி ரூபாய் இருந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வரும் நிலையில் மேலும் காணிக்கை அதிகரிக்கும் என்கிறனர் கோவில் நிர்வாகத்தினர்.