அயோத்தியில் ஆண்டிற்கு 5 கோடி பக்தர்கள் தரிசனம் செய்வர்; ஆய்வில் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2024 11:01
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா 22ம் தேதி நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். இதையடுத்து கோயிலுக்கு பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதல் நாளில் 3லட்சமாக இருந்த பக்தர்கள், அடுத்த நாள் 5லட்சம் என உயர்ந்தது. தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் அயோத்தியில் ஆண்டிற்கு 5 கோடி பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று கூறி உள்ளது வெளிநாட்டு ஆய்வு நிறுவனமான ஜெஃப்ரிஸ். மேலும் பல நாட்டில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் உ.பி. மட்டுமல்லாமல் இந்தியப் பொருளாதாரமும் உயரும் என்றும் கூறியுள்ளது.