Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் ஆதியோகி ... திருச்செந்தூரில் மூலவர் பிரதிஷ்டை தினம்; தை உத்திர வருஷாபிஷேகம் திருச்செந்தூரில் மூலவர் பிரதிஷ்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு தியாகராஜரின் 177 வது ஆராதனை : பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி ஆயிரக்கணக்கானோர் இசையஞ்சலி
எழுத்தின் அளவு:
திருவையாறு தியாகராஜரின் 177 வது ஆராதனை : பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி ஆயிரக்கணக்கானோர் இசையஞ்சலி

பதிவு செய்த நாள்

30 ஜன
2024
10:01

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜர் ஆராதனை விழாவில், பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர்.

திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜசுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழா,  கடந்த 26ம் தேதி துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை 9:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் பாடியும், இசைத்தும்  ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் ஆராதனை விழாவின் நிறைவு நாளான இன்று (30ம் தேதி) பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து காலை 6 மணிக்கு உஞ்சவிருத்தி நிகழ்ச்சியான சுவாமி வீதியுலா நடைபெற்றது.
 பின்னர் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரை நாகசுரம் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து 9:00 மணியளவில் பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது. பின்னர், நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ... என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ஸாதிஞ்சநெ ஓ மநஸா... என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த கனகன ருசி ராக நகவஸந நிந்நு... என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு... ஆகிய பாடல்களை  பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, கடலூர் ஜனனி, ஓ.எஸ்.அருண்,  அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், சீர்காழி சிவசிதம்பரம், உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு பல்வேறு வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாரதனை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar