அயோத்தியை அடுத்து.. அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2024 12:02
துபாய்: அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம், பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ள அபுதாபி மந்திரின் படங்களைப் பகிர்ந்துள்ளது. கோயிலை பிரதமர் மோடி வரும் 14ம் தேதி திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் இந்து கோயில் கட்டப்பட்டு வருகிறது. 1,200க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை நிறுவி வரும் வரும் பாப்ஸ் (BAPS ) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் இக்கோவிலுக்கு 402 வெள்ளை பளிங்கு தூண்களை செதுக்கியுள்ளனர். இக்கோயிலில் கிருஷ்ணன், சிவன், ஐயப்பன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இக்கோயில் கட்டுமான பணிகள் முடிந்துள்ளது. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் மோடி வரும் 14ம் தேதி திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம், பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ள அபுதாபி மந்திரின் படங்களைப் பகிர்ந்துள்ளது.