பதிவு செய்த நாள்
09
பிப்
2024
06:02
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி திருவிழா தொடக்கமாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி முன்னதாக அம்மனுக்கு பால், பழம், மஞ்சள், குங்குமம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து கோயிலை சுற்றி வந்து சுபமுகூர்த்த கால் ஊண்டப்பட்டு பூஜைகள் நடந்தது. இதில் கோவில் பரம்பரை பரக்காவலர் பூசாரிகள் கணேஷ், சின்ராஜ், கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், யுவராஜ், தினேஷ்குமார் உள்ளிட்டோர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பிப்.12 கொடியேற்றம் மற்றும் பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.27 கழுகு மரம் ஏறுதல், அக்கினி சட்டி,பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பரம்பரை பூசாரிகள் செய்து வருகின்றனர்.