அசுவினி: உங்கள் நட்சத்திர நாதனான கேது பகவான் இந்த மாதம் முழுவதும் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். லாப ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் அரசு வகையிலான சங்கடங்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு ஏற்படும். இதுவரையில் தடைபட்டு வந்த முயற்சிகள் இனி வெற்றியாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். விவசாயிகளின் விளைப் பொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். குரு பகவானின் பார்வைகளால் குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். குலதெய்வ அருள் உண்டாகும். உங்கள் மனதை வாட்டிவந்த பிரச்னைகள் விலகும். தம்பதியரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். தெய்வ அருள் உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். உங்களில் சிலர் புதிய வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை உண்டாகும். சந்திராஷ்டமம்: மார்ச். 2, 3. அதிர்ஷ்ட நாள்: பிப். 16,18,25, மார்ச் 7,9 பரிகாரம் விநாயகருக்கு அருகம்புல் சூட்டி வழிபட நன்மை அதிகரிக்கும்.
பரணி: உங்கள் ராசிநாதனும் நட்சத்திரநாதனும் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சில சிரமங்களை நீங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பாராத விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகும். வரவு செலவுகளில் முடிந்த வரையில் கவனமாக இருப்பது நல்லது. குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும் ஒன்பதாம் இடத்தை பார்ப்பதால் தெய்வ அருள் உண்டாகும். பெரியோர்களின் உதவியால் நினைத்ததை சாதித்துக்கொள்வீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவானால் தொழில், வியாபாரம் விருத்தியாகும். சிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவர். கடந்த காலத்தில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களுக்கு லாபச் சூரியனால் சங்கடங்கள் விலகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சனிபகவானின் பார்வை ஜென்ம ராசியிலும் எட்டாம் இடத்திலும் பதிவதால் சிலருக்கு வம்பு, வழக்குகள் தேடிவரும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களின் நிலையில் உயர்வு உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குடும்பம், பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சியனைத்தும் லாபத்தில் முடியும். சந்திராஷ்டமம்: மார்ச் 3, 4. அதிர்ஷ்ட நாள்: பிப். 15,18,24, மார்ச் 6,9. பரிகாரம்: மடப்புரம் காளியை வழிபட்டால் நன்மை கூடும்.
கார்த்திகை 1 ம் பாதம்: உங்கள் நட்சத்திரநாதன் 11ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்தை உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதம் என்றே சொல்ல வேண்டும். உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். இதுவரையில் தடைபட்ட முயற்சிகள் இனி ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். மற்றவர்கள் முன்பாக உங்கள் ஆளுமைத்திறன் வெளிப்படும். லாபம் பலவழிகளில் வர ஆரம்பிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். பணியாளர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள்கள் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். புதிய இடம், சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றியாகும் பெண்களின் வாழ்க்கையில் இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். வெளிவட்டாரத்திலும் குடும்பத்திலும் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பாராட்டப்படுவீர்கள். விவசாயிகளின் எண்ணம் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சங்கடம் விலகும். ஆசிரியர்களின் ஆதரவு உண்டாகும். சந்திராஷ்டமம்: மார்ச் 4 அதிர்ஷ்ட நாள்: பிப். 18, 19, மார்ச். 1,9,10 பரிகாரம்: சிவனைச் சரணடைந்தால் சிரமம் குறையும்.
மேலும்
தை ராசி பலன் (14.1.2025 முதல் 12.02.2025 வரை) »