பதிவு செய்த நாள்
10
பிப்
2024
05:02
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: உங்கள் நட்சத்திரநாதன் இந்த மாதம் முழுவதும் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகம் வியாபாரம் போன்றவற்றில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் எதிர்பார்த்த வருமானம் வந்துசேரும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். உங்கள் செல்வாக்கு உயரும் என்றாலும், தொழிலில் முழுமையான அக்கறையை நீங்கள் செலுத்துவதால் லாபம் அதிகரிக்கும். புதனின் அருளால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கலைஞர்களின் திறமை வெளிப்படும். சிலர் புதிதாக சொத்து வாங்குவீர்கள். பாக்கிய சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்களின் தேவைகள் பூர்த்தியாகும். குழந்தைகளின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 4, 5
அதிர்ஷ்ட நாள்: பிப். 15,19,24 மார்ச் 1,6,10.
பரிகாரம்: விநாயகப்பெருமானை வழிபட்டு வர வளம் சேரும்.
ரோகிணி: சந்திர பகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறுகின்ற மாதமாக இருக்கும். ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கின்ற சுக்கிர பகவான் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார். புதிய வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் புதபகவான் தொழில் ரீதியாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்குவார். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்து சேர்க்கை உண்டாகும். அரசு வழி முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் திறமை செல்வாக்கு யாவும் இப்போது வெளிப்படும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலவீனம் அடைவார்கள். அரசுவழி முயற்சிகளில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். ஏழாம் இடத்திற்கு சனியின் பார்வை உண்டாவதால் குடும்பத்தினரிடம் அனுசரித்துச்செல்வது இக்காலத்தில் நன்மையாக இருக்கும். பெண்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் சங்கடங்கள் இல்லாமல் போகும். நட்பு வட்டத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. வீண்செலவுகள் அதிகரிக்கும். இருந்தாலும் எதிர்பாராத வருமானம் வரும். உங்கள் தேவையனைத்தும் பூர்த்தியாகும். மாணவர்களின் உயர்கல்விக் கனவு நிறைவேறுகின்ற வகையில் படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். தேர்வை தைரியமாக எதிர்கொள்ளும் நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு சங்கடங்கள் விலகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 5, 6.
அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 20, 24, மார்ச். 2,6,11
பரிகாரம் சிவனை வழிபட சங்கடம் அனைத்தும் விலகும்.
மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: இந்த மாதம் முழுவதும் உங்கள் நட்சத்திரநாதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் அவருடைய பார்வை மூன்றாம் இடத்திற்கு உண்டாவதால் உங்கள் செயலில் வேகம் இருக்கும். காரியங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பத்தாம் இடச் சூரியனால் அரசுவழி முயற்சிகள் ஆதாயம் தரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொறுப்பு உண்டாகும். லாப ராகுவால் எதிர்பார்த்த வருமானம் வர ஆரம்பிக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். புதபகவான் உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவார். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பார். சொத்து சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி வருமானம் வர ஆரம்பிக்கும். சுக ஸ்தானத்திற்கு சனிபகவானின் பார்வை பதிவதால் அலைச்சல் அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலையில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஏதாகிலும் ஒரு வகையில் முட்டல் மோதல் என்ற நிலை உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பெண்களின் கனவுகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கவனம் செல்லும். விவசாயிகளுக்கு விளைச்சலில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் எண்ணம் கல்வியின் மீது செல்லும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 6, 7.
அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 18, 24. மார்ச் 6, 9.
பரிகாரம்: சீதாராமரை வழிபட வாழ்க்கை வளமாகும்.