பதிவு செய்த நாள்
12
ஜன
2024
06:01
பூரட்டாதி 4 ம் பாதம்; ஞானத்திற்கும் அந்தஸ்திற்கும் ஆற்றலுக்கும் காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு நினைத்ததை சாதிக்கும் வலிமை இயல்பாகவே இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் அதிபதி தன ஸ்தானத்தில் சஞ்சரித்து வரவுகளை அதிகரிப்பார். குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை விலக்கி வைப்பார். கொடுத்த வாக்கை காப்பாற்றும்படி செய்வார். உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். தொழிலில் இருந்த தடைகள் விலகி ஆதாயம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வெளிநாட்டு தொடர்புடைய முயற்சிகள் வெற்றியாகும். அந்நியர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரிய பகவான் அரசியல்வாதிகளுக்கும், பணியாளர்களுக்கும் செல்வாக்கை அதிகரிப்பார் இதுவரையில் தடைபட்டிருந்த முயற்சிகள் இனி வெற்றியாகும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம், பதவி உயர்வு வந்து சேரும். தொழிலாளர்கள் நிலையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகள் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜன. 30.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 21, பிப்.3,12.
பரிகாரம்: குரு பகவானுக்கு முல்லை மலர் சாத்தி வழிபட வாழ்க்கை வளமாகும்.
உத்திரட்டாதி: தன, புத்திர காரகனான குரு, கர்மகாரகனான சனி பகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு உங்கள் முன்னேற்றம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து, குடும்ப, பாக்ய ஸ்தானங்களை பார்ப்பதால் குடும்பத்திற்குள் எதிர்பாராத நெருக்கடிகள், பிரச்னைகள், பணவரவில் தடைகள் ஏற்படும். பெரியோர்களுடன் கருத்து மோதல் உண்டாகும். முயற்சிகளில் தடைகள் ஏற்படும் என்றாலும் சத்ரு ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை பதிவதால் உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். போட்டியாளர்கள், மறைமுகமாக உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் பணியில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தில் அக்கறை அதிகரிக்கும் என்றாலும் சில நேரங்களில் எதிர்மறையான சிந்தனைகளும் தோன்றும். ஜென்ம ராகுவும், சப்தம கேதுவும் கணவன் மனைவிக்குள் சங்கடத்தை உண்டாக்குவர். புதிய நட்புகளால் குடும்பத்தில் குழப்பம் தோன்றும். வெளிநாடு செல்லும் முயற்சிக்கு அனுமதி கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். கல்வியில் அக்கறை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஜன. 30,31.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17,21,26. பிப். 3,8,12.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட நலம் சேரும்.
ரேவதி: அறிவுக்காரகனான புதன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்தவொரு செயலிலும் புத்தி சாதுரியத்துடன் செயல்பட்டு வெற்றியடையும் திறமையுண்டு. உங்கள் நட்சத்திரநாதன் தொழில், லாப ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். ராசி அதிபதி தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும் என்றாலும் விரய சனியின் பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் உறவுகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தடைபட்டிருந்த வரவு வந்து சேரும். ஒப்பந்ததாரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு பூமி சேர்க்கை உண்டாகும். தொழிலாளர்களின் நிலை உயரும். பெண்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். புத்திசாலித்தனம் வெளிப்படும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அரசு வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். விவசாயிகள் நிலை முன்னேற்றம் அடையும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜன 31, பிப்.1.
அதிர்ஷ்டநாடகள்: ஜன. 21,23,30, பிப். 3,5,12.
பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.