பதிவு செய்த நாள்
10
பிப்
2024
05:02
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் லாப, தைரிய, சத்ரு ஸ்தானங்களைப் பார்ப்பதால் உங்கள் நிலையில் இதுவரை இருந்த சங்கடங்கள் எல்லாம் விலகும். நீங்கள் நினைப்பதெல்லாம் நடந்தேறும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வரவு அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை உண்டாக்குவார். புதிய சொத்து சேர்க்கையை ஏற்படுத்துவார். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உண்டாகும். புதபகவான் மாதத்தின் பிற்பகுதியில் உங்களுக்கு யோகத்தை வழங்குவார். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பார். சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகி லாபம் தோன்றும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். பெண்களின் கனவுகள் நிறைவேறும். கல்வி வேலைவாய்ப்பு போன்ற முயற்சிகள் வெற்றியாகும். திருமண வயதினருக்கு திருமணம் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். விவசாயிகள் முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவர்.
சந்திராஷ்டமம்: மார்ச் 6, 7.
அதிர்ஷ்ட நாள்: பிப்.18, 23. மார்ச். 5, 9.
பரிகாரம்: கோளாறு பதிகம் பாடி சிவனை வழிபட குறை தீரும்.
திருவாதிரை: யோகக்காரகனான ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். உங்கள் நட்சத்திர நாதன் கேந்திர பலம் பெறுவதுடன் மாதத்தின் பிற்பகுதியில் ராசிநாதனும் அங்கே சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த சங்கடம் விலகும். மாதத்தின் பிற்பகுதியில் சொத்துச் சேர்க்கை உண்டாகும். உங்கள் நீண்டநாள் கனவு நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் தொட்டதெல்லாம் பொன்னாகும். வரவு அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். குலதெய்வ அருள் பரிபூரணமாக இப்போது உண்டாகும். குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடங்கள் விலகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். நீண்டநாள் நெருக்கடிகள் முடிவிற்கு வரும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய அனுமதிகள் கிடைக்கும். பெண்களின் விருப்பங்கள் நிறைவேறும். தடைபட்டிருந்த முயற்சிகள் லாபமாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வு ஏற்படும். கலைஞர்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாகும். புகழ், செல்வாக்கு போன்றவை உண்டாகும். விவசாயிகளின் செயல்களில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச். 8.
அதிர்ஷ்ட நாள்: பிப். 13, 14, 22, 23. மார்ச். 4, 5, 13
பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: உங்கள் நட்சத்திரநாதன் குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலகும். உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு உயரும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாக்கிய ஸ்தான சனி பகவானால் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பெரியோரின் ஆசிர்வாதம் உண்டாகும். தெய்வஅருள் ஏற்படும். சிலர் கோயில்களுக்கு புனித யாத்திரை சென்று வருவதுடன் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாலினரால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவிற்கு வரும். உங்கள் நிர்வாகத்திறன் வெளிப்படும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இயந்திரத் தொழில், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மருத்துவம் பொறியியல் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தைக் காண்பர். அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் உயர்வு பெறுவர். பெண்களின் விருப்பம் நிறைவேறும். முயற்சிகள் வெற்றி பெறும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விவசாயிகள் திட்டமிட்டு செயல்படுவதால் லாபம் காண முடியும். கலைஞர்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதால் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 9
அதிர்ஷ்ட நாள்: பிப். 21, 23, மார்ச். 3, 5, 12
பரிகாரம்: லட்சுமி ஹயக்ரீவரை வழிபட விருப்பம் நிறைவேறும்.