பதிவு செய்த நாள்
10
பிப்
2024
06:02
சித்திரை 3, 4 ம் பாதம்: தைரிய, வீரிய, சகோதர காரகனான செவ்வாய், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு உங்கள் வெற்றியை நோக்கிய சிந்தனையே எப்பொழுதும் இருக்கும். நினைத்ததை அடையும் வரை அதற்குரிய முயற்சிகளை தொடர்ந்து கொண்டே இருப்பீர்கள். இந்த மாதம் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால் இதுவரையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். வேலைவாய்ப்பிற்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை ஏற்படும். புதிய இடம் வாங்கும் முயற்சியும், தொழில் தொடங்கும் எண்ணமும் நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வந்து சேரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் உங்களுக்கு சாதகமாகும். வியாபாரத்தில் எதிரிகள் பின்வாங்கிச் செல்வார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதம் என்றே சொல்ல வேண்டும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு அதிகரிக்கும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்ப்புகள் நீங்கும். மாதத்தின் பிற்பகுதியில் விருப்பங்கள் நிறைவேறும். விவசாயிகளின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் கல்வியின் மீது அக்கறை அதிகரிக்கும். பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் முயற்சியில் முழுமையாக ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம்: பிப். 17, 18
அதிர்ஷ்ட நாள்: பிப்.15,24. மார்ச் 6,9
பரிகாரம்: ஆதிபராசக்தியை தினமும் வழிபட்டால் சங்கடம் தீரும்.
சுவாதி: யோகக்காரகனான ராகு, அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒரு செயலிலும் அதிகமான ஈடுபாடு இருக்கும். எதிர்பார்ப்பு என்பது உங்களுக்குள் எப்போதும் இருக்கும். அதை நோக்கியே உங்கள் முயற்சிகளும் இருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். உடலில் இருந்த பிரச்னைகள் நீங்க ஆரம்பிக்கும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி அனுகூலம் உண்டாகும். வழக்குகள் இருப்பின் உங்களுக்கு சாதகமாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மாதத்தின் பிற்பகுதியில் ஏற்படும். பெண்களின் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும். இதுவரையில் இருந்த பாதிப்புகள் நீங்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் விலகும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகள் வந்து சேரும். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை முன்னெடுப்பீர்கள். மாணவர்கள் சூழலைப் புரிந்து கொண்டு பொதுத் தேர்விற்குரிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம்: பிப்.18,19
அதிர்ஷ்ட நாள்: பிப்.15,22,24, மார்ச் 4,6
பரிகாரம்: துர்கையை ராகு காலத்தில் வழிபட வளம் உண்டாகும்.
விசாகம் 1,2,3 ம் பாதம்: அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், தன, புத்திர காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அறிவாற்றல் என்பது அதிகபட்சமாக இருக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனைகள் கூறி வழி நடத்துவதில் முதலிடத்தில் இருப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதம் என்றே சொல்ல வேண்டும். அதற்கு காரணம் உங்கள் நட்சத்திரநாதன் ஏழாம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியை பார்ப்பதுதான். அதன் காரணமாக இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடி யாவும் விலக ஆரம்பிக்கும். பொருளாதார நிலை உயரும். சமூகத்தில் அந்தஸ்து, செல்வாக்கு உண்டாகும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் லாப ஸ்தானத்தையும் குருபகவான் பார்ப்பதால் பொருளாதார நெருக்கடி விலகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் முடிவிற்கு வரும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும் உடல் ரீதியாக இருந்த பிரச்னைகள் விலகுவதுடன் வாழ்க்கையிலும் நன்மை ஏற்படும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்காக காத்திருந்தவர்களுக்கு அதற்குரிய பாக்கியம் உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். தொழிலாளர்களுக்கு இருந்த சங்கடம் விலகும். விவசாயிகளின் நிலையில் மேம்பாடு தோன்றும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவர்.
சந்திராஷ்டமம்: பிப். 19,20
அதிர்ஷ்ட நாள்: பிப். 15,21,24, மார்ச் 3,6,12
பரிகாரம்: திருப்பரங்குன்றம் முருகனை வழிபட நன்மைகள் பெருகும்.