பதிவு செய்த நாள்
10
பிப்
2024
05:02
உத்திரம் 2,3,4 ம் பாதம்: ஆன்ம காரகனான சூரியன், வித்யா காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, எல்லாவிதமான பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் சக்தி எப்போதும் இருக்கும். உங்கள் புத்திசாலித்தனமே உங்கள் வாழ்க்கையின் அடிப்படை என்று சொல்லலாம். இந்த மாதம் முழுவதும் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உங்கள் நட்சத்திரநாதன் சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கிருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஜென்ம ராசிக்குள் கேது பகவான் சஞ்சரிப்பதால் மனதில் குழப்பங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் நிலை உண்டாகும். வியாபாரம், தொழில் போன்றவற்றில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமாக ஏற்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். ஏழாமிட ராகுவால் எதிர்பாலினரிடமும் நட்புகளிடமும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும். இல்லையெனில் விரோதத்தை சந்திக்க நேரிடும். . பெண்களுக்கு இக்காலத்தில் உடல் ரீதியான பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். விவசாயிகளின் விளைபொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவர். கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம்: மார்ச். 14,15.
அதிர்ஷ்ட நாள்: பிப்.19,23. மார்ச் 1,5,10
பரிகாரம்: பாலகிருஷ்ணரை வழிபட நிம்மதி நிலைக்கும்.
அஸ்தம்: மனக்காரகன் சந்திரனை நட்சத்திரநாதனாகவும், கல்விக்காரகன் புதனை ராசிநாதனாகவும் கொண்டு பிறந்த உங்களுக்கு எந்தவொரு செயலையும் திறமையாக செய்திடக்கூடிய ஆற்றல் இருக்கும். எதற்காகவும் உங்களுடைய முயற்சிகளை நீங்கள் இடையில் நிறுத்தி விட மாட்டீர்கள். இந்த மாதத்தில் உங்கள் தன குடும்பாதிபதி சுக்கிர பகவான் உங்களுக்கு முழுமையான யோகத்தை வழங்கிட இருக்கிறார். நீங்கள் எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். உங்கள் ராசியாதிபதியும் மாதத்தின் முற்பகுதியில் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிலை உயரும். மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு விரும்பிய இட மாற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். புதிய சொத்து சேர்க்கையும் உண்டாகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார். சுயதொழில் தொடங்க முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு வேலை வாய்ப்பிற்குரிய தகவல் வந்து சேரும். கலைஞர்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். விவசாயிகள் தாங்கள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: மார்ச் 15,16
அதிர்ஷ்ட நாள்: பிப். 20,23, மார்ச் 2,5,11
பரிகாரம்: மீனாட்சியம்மனை வழிபட்டால் நன்மை பன்மடங்காகும்.
சித்திரை 1,2 ம் பாதம்: தைரிய, வீரிய, பராக்ரமக் காரகனான செவ்வாய், வித்யாகாரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒன்றையும் வேகமாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். யாருக்காகவும் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்குரிய பாதை எப்பொழுதும் தனித்ததாகவே இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு இதற்கு முன்பிருந்த சங்கடம் எல்லாம் விலகும் மாதமாக இருக்கும். சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, சூரியன் இருவரும் உங்கள் ஆற்றலை அதிகரிப்பர். முயற்சிகளை வெற்றியாக்குவர். நினைத்ததை சாதிக்கும் நிலையை உண்டாக்குவர். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். அரசு வழியில் உண்டான சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகி ஆரோக்கியமாக செயல்படுவீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். குருபகவானின் பார்வை வாக்கு ஸ்தானத்திற்கு உண்டாவதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த சங்கடங்கள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். விவசாயிகளின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 16,17
அதிர்ஷ்ட நாள்: பிப்.18, 23. மார்ச் 5, 9
பரிகாரம்: சாமுண்டீஸ்வரியை மனதில் வேண்டி வழிபட நன்மை உண்டாகும்.