விசாகம் 4 ம் பாதம்: பொன்னுக்கும், புகழுக்கும் காரகனான குரு, தைரிய வீரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு விவேகத்துடன் கூடிய வீரம் இருக்கும். எந்தவொரு முயற்சியிலும் வெற்றி அடைந்திடக் கூடிய சக்தி இருக்கும். இந்த மாதம் உங்கள் ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். குருபகவானின் பார்வை உங்கள் குடும்ப, தன ஸ்தானத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். பொருளாதார நெருக்கடி நீங்கும். தொழில் ஸ்தானத்திலும் குருபகவானின் பார்வை பதிவதால் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டு தொடர்புகள் யோகத்தை ஏற்படுத்தும். மாதத்தின் முற்பகுதியில் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பெண்களுக்கு விருப்பம் நிறைவேறும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். தைரியமாக செயல்படுவீர்கள் என்றாலும் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. வயிற்றுப் பகுதியில் ஏதேனும் சங்கடம் தோன்றிக் கொண்டே இருக்கும். அதற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. உத்தியோகம் புரியும் இடத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். விவசாயிகளுக்கு யோகமான மாதமாக இருக்கும். நீண்ட நாளாக வாங்க நினைத்த இடத்தை இந்த மாதம் வாங்குவீர்கள். விளைச்சலில் வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியின் மீது அக்கறை உண்டாகும். சந்திராஷ்டமம்: பிப்.19,20 அதிர்ஷ்ட நாள்: பிப்.18,21, மார்ச் 3,9,12. பரிகாரம்: மாரியம்மனுக்கு விளக்கேற்றினால் கஷ்டம் அனைத்தும் தீரும்.
அனுஷம்: கர்மகாரகன் மற்றும் ஆயுள்காரகனான சனி, தைரிய வீரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இயல்பாகவே தைரியமும் துணிச்சலும் அதிகபட்சமாக இருக்கும். எந்த ஒன்றிலும் உங்கள் இலக்கை எட்ட வேண்டும் என்ற நோக்கம் அழுத்தமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் நான்காம் இடத்தில் சஞ்சரித்தாலும் ராசிநாதன் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் செயல்கள் யாவும் வெற்றியாகும். அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் தடைகளை சந்தித்தாலும் உங்கள் முயற்சியால் அவை விலகும். வருமானத்திற்காக மேற்கொள்ளும் காரியங்கள் லாபத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் மாதத்தின் முற்பகுதியில் உங்களுக்கு யோகத்தை உண்டாக்குவார். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தினர் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் வியாபாரத்தில் கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பான செயல்கள் இந்த நேரத்தில் சங்கடத்தை ஏற்படுத்தும். புதபகவானின் சஞ்சார நிலையால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெண்களின் விருப்பம் பூர்த்தியாகும். சுயதொழில் செய்ய நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும். விரயச் செலவுகள் அதிகரித்தாலும் அவற்றினால் ஆதாயமே ஏற்படும். கலைஞர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். குலதெய்வ அருள் உண்டாகும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விவசாயிகளின் முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: பிப். 20,21 அதிர்ஷ்ட நாள்: பிப்.17,18,26, மார்ச் 8,9 பரிகாரம்: பழநி முருகனை வழிபட முயற்சிகள் வெற்றியாகும்.
கேட்டை: கல்வி மற்றும் வித்தைகளுக்கு காரகனான புதன், ரத்த யுத்தக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றிலும் திறம்பட செயல்படக்கூடிய ஆற்றல் இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இந்த மாதம் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் உங்கள் முயற்சிகளுக்கு துணை புரிவார் என்பதால் எதிர்பார்த்த ஆதாயங்கள் உண்டாகும். சிலர் கோயில் வழிபாட்டில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள். புதிய சொத்து சேர்க்கையும் சிலருக்கு ஏற்படும். குருபகவானின் பார்வை குடும்ப ஸ்தானத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். தொழிலில் இருந்த நெருக்கடிகள் நீங்கி வருமானம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட தொல்லைகள் முடிவிற்கு வரும். இருந்தாலும் நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி, சூரியனால் உடல் நிலையிலும் மன நிலையிலும் சங்கடங்களை சந்திக்க நேரிடும். அலைச்சல் அதிகரிக்கும். அரசு வழியில் சங்கடங்கள் தோன்றும் என்றாலும் உங்கள் ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய திறமை உங்களுக்கேற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். விவசாயிகளின் விருப்பம் பூர்த்தியாகும். மாணவர்கள் இந்த நேரத்தில் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும். சந்திராஷ்டமம்: பிப். 21,22 அதிர்ஷ்ட நாள்: பிப்.18,23, மார்ச் 5,9 பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட தடைகள் விலகும்.
மேலும்
மார்கழி ராசி பலன் (16.12.2024 முதல் 13.1.2025 வரை) »