பதிவு செய்த நாள்
10
பிப்
2024
06:02
மூலம்: தன புத்திரக்காரகனான குரு, ஞான மோட்ச காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வ அருள் எப்போதும் இருக்கும். எல்லாவற்றையும் சிந்தித்து செயல்படக் கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள். இந்த மாதத்தில் உங்கள் ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியை பார்ப்பதால் உங்கள் நிலையில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். அந்தஸ்தும், செல்வாக்கும் உயரும். தெய்வ அருள் முழுமையாக உங்களுக்கு ஏற்படும். லாப ஸ்தானத்திற்கும் குருபகவானின் பார்வை பதிவதால் வருமானத்தில் இருந்த நெருக்கடி விலகி எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு அந்த பாக்கியம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். விவசாயிகள் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகி ஆதாயமான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: பிப். 22,23
அதிர்ஷ்ட நாள்: பிப்.16, 21, 25, மார்ச் 3,7,12
பரிகாரம்: முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
பூராடம்: அறிவாற்றலையும் அந்தஸ்தையும் வழங்கும் குருபகவான், அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரனுடைய அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒன்றிலும் ஆழ்ந்த அறிவு இருக்கும். தெளிவான சிந்தனை இருக்கும். எந்த ஒன்றிலும் யோசிக்காமல் ஈடுபட மாட்டீர்கள். இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராஜ கிரகமான சூரியனும், கர்ம காரகனான சனிபகவானும் சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஆதாயம் ஏற்படும். தெய்வ அருளால் செயல்கள் அனைத்தும் வெற்றியாகும். உங்கள் நட்சத்திரநாதன் ராசிக்குள்ளாகவே சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். குடும்பம், தொழில், வியாபாரம் போன்றவற்றில் இருந்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பணியிடத்தில் பணியாளர்களின் மதிப்பு அதிகரிக்கும். பணியில் இருந்த சங்கடங்கள் விலகும். உடல்நிலையில் ஆரோக்கியம் ஏற்படும். பெண்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடங்கள் விலகும். திருமண வயதினருக்கு வரன் வந்து சேரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய நல்ல சூழ்நிலை ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசுவழியில் ஆதாயமான நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு யோகமான மாதமாக இருக்கும். விளைபொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் கல்வியில் ஆர்வம் காட்டுவர்.
சந்திராஷ்டமம்: பிப்.23,24.
அதிர்ஷ்ட நாள்: பிப்.15,21,மார்ச் 3,6,12
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கினால் செல்வம் பலமடங்கு உயரும்.
உத்திராடம் 1ம் பாதம்: ஞானக்காரகன் குரு, ஆற்றல் காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அறிவாற்றலோடு எந்த ஒன்றையும் செய்து முடிக்கும் தைரியமும் துணிச்சலும் இருக்கும். திட்டமிட்டு செயல்படக் கூடியவர்களாக இருப்பீர்கள். இந்த மாதம் உங்கள் நட்சத்திர நாதன் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். அரசு வழியில் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மூன்றாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவி வந்து சேரும். மக்கள் செல்வாக்கு உண்டாகும். குருபகவான் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால் இக்காலத்தில் குடும்பம், வாழ்க்கை, தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். பெண்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். விவசாயிகளின் விலைபொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதால் மதிப்பெண் கூடும்.
சந்திராஷ்டமம்: பிப். 24,25
அதிர்ஷ்ட நாள்: பிப். 19,21,28,மார்ச் 1,3,10,12.
பரிகாரம்: வீரபத்திரரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.