பதிவு செய்த நாள்
10
பிப்
2024
06:02
உத்திராடம் 2,3,4 ம் பாதம்: ஆயுள் காரகன் கர்மக் காரகனான சனி பகவான், ஆத்ம காரகனான சூரியன் அம்சத்தின் பிறந்த உங்களுக்கு ஒருபக்கம் செயலில் வேகம் இருக்கும். மறு பக்கம் நிதானித்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்த இரண்டிற்கும் இடையில் உங்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். இந்த மாதம் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்கள் முயற்சிகளை லாபமாக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். வெளிநாட்டு தொடர்புகளின் வழியாக ஆதாயத்தை ஏற்படுத்துவார். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். இரண்டாம் இடத்தில் சனிபகவானும் சூரியனும் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நெருப்பு வெளிப்படும். குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த நிலை இல்லாமல் போகும். மற்றவர்களின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால் முடிந்தவரை அமைதி காப்பது நல்லது. குருபகவானின் பார்வை உங்கள் தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள். லாபம் அதிகரிக்கும். விழிப்புடன் செயல்படுங்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். புதிய தொழில் முயற்சிகளில் யோசித்து இறங்குங்கள். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தெய்வ அருள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்திற்குள் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. விவசாயிகளுக்கு வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பின் மீது அதிக அக்கறை செலுத்துவது அவசியம். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: பிப். 24,25
அதிர்ஷ்ட நாள்: பிப்.17,18,26, மார்ச் 8,10
பரிகாரம்: நரசிம்மரை வணங்கினால் மனதில் நிம்மதி நிலைக்கும்.
திருவோணம்: மனக் காரகனான சந்திரன், ஆயுள் காரகனான சனிபகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு மன வலிமை அதிகமாக இருக்கும். எந்த ஒரு செயலிலும் நீங்கள் வெற்றி பெறும் வரை உங்கள் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இந்த மாதம் உங்களுக்கு சுக்கிர பகவான் உங்கள் ஜென்ம ராசிக்குள்ளும் குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். எதிர்பார்த்த வரவு இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். குருபகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் செய்யும் தொழிலை விரிவு செய்வீர்கள். தொழிலுக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். சனிபகவானின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பொருளாதார நெருக்கடி விலகும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். சிலர் வெளிநாட்டு தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் சுமூகமாகும். செல்வாக்கு அதிகரிக்கும். பெண்களின் விருப்பங்கள் இந்த மாதம் எளிதாக நிறைவேறும். சிலர் தங்கள் பெயரில் இடம் வாங்குவர். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்திற்குள் சலசலப்புகள் வந்து செல்லும் என்றாலும் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நிலையில் சங்கடம் விலகி ஆரோக்கியமாக செயல்படுவீர்கள். விவசாயிகள் புதிய முயற்சியில் ஈடுபட்டு லாபம் அடைவர். மாணவர்களுக்கு கல்வியில் அதிக அக்கறை தேவை.
சந்திராஷ்டமம்: பிப்.25.
அதிர்ஷ்ட நாள்: பிப்.17,20,26, மார்ச் 2,8,11
பரிகாரம் சிவனை பிரதோஷத்தன்று வழிபட்டால் பிரச்னை விலகும்.
அவிட்டம் 1,2 ம் பாதம்: தைரிய வீரிய பராக்ரம காரகனான செவ்வாய், ஆயுள் காரகனான சனியின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, ஒவ்வொரு செயலிலும் அதிக முயற்சி தேவைப்படும். சில நேரங்களில் அதில் தடைகளும் ஏற்படும் என்றாலும், துணிச்சலுடன் செயல்படுவீர்கள். நினைத்ததை சாதிக்கும் வரை ஓயாமல் உழைப்பீர்கள். இந்த மாதம் ராசிக்குள் உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாய் சஞ்சரிப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளிநாட்டு தொடர்புடைய வியாபாரங்களில் ஆதாயம் அதிகரிக்கும். தொழிற்சாலை, ஹார்டுவேர்ஸ், பேக்டரி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் போன்ற தொழில்கள் செய்வோருக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். சுக்கிர பகவான் மாதம் முழுவதும் ஜென்ம ராசி, இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். பெண்களுக்கு இது யோகமான மாதம். குரு பகவானின் பார்வை உடல் நிலையில் இருந்த சங்கடங்களை விலக்கும். சுயதொழில் செய்வோருக்கு ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்களின் சங்கடங்கள் விலகும். விவசாயிகள் நவீன விவசாயத்தில் ஈடுபட்டு லாபம் காண்பர். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: பிப்.26
அதிர்ஷ்ட நாள்: பிப்.17, 18, 26, மார்ச் 8,9
பரிகாரம் அனுமனை வழிபட்டால் அல்லல் எல்லாம் நீங்கும்.