திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோயில் மாசி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2024 02:02
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்த அம்மன் கோயில் மாசி திருவிழா பத்தாம் நாளான இன்று காலை அம்மன் தேரோட்டம் நடந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா நடைபெற்றது. விழாவின் பத்தாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் வலம் வந்தது.