பாலக்காடு; குருவாயூர் கோவில் பத்மநாபன் என்ற யானைக்கு நினைவஞ்சலி நடந்தன.
கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ண கோவில். இந்த கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு தற்போது 40 யானைகளை பராமரித்து வருகின்றன. இந்தக் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான யானை குருவாயூர் பத்மநாபன். பல ஆண்டுகளாக திருவிழாவின் போது உற்சவ மூர்த்தியின் தங்க சிலையை எந்தி தெரு வீதிகளில் வந்த யானை பத்மநாபன். இந்த நிலையில் 2020 பிப்., மாதம் நோய்வாய்ப்பட்டு பத்மநாபன் என்ற இறந்தது. இதனைத் தொடர்ந்து எல்லா ஆண்டும் குருவாயூர் பத்மநாபன் நினைவஞ்சலி செலுத்தும் தினம் நடத்தி வந்தன. நடப்பாண்டு நினைவஞ்சலி தினம் இன்று நடந்தது. கோவில் அருகே உள்ள விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்ட பத்மநாபன் என்ற யானையின் உருவச்சிலை முன் இந்த நிகழ்ச்சி நடந்தது. தேவஸ்தான தலைவர் விஜயன், நிர்வாக குழு உறுப்பினர் மனோஜ், ரவீந்திரன் ஆகியோர் குத்து விளக்கேற்றி, பத்மநாபன் உருவச்சிலை முன் மலர் வளையம் சமர்ப்பித்தனர். தொடர்ந்து தலைவரும் நிர்வாக குழு உறுப்பினர்களும் பக்தர்களும் உருவ சிலையில் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். இதையடுத்து தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோகுல் என்ற யானையின் தலைமையிலான யானைகளும் உருவச்சிலை முன் மலர் தூவி வணங்கி நினைவஞ்லி செலுத்தின.