பொதுத்தேர்வு மாணவர்களுக்காக சீனிவாசப் பெருமாள் கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர் யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2024 12:02
போடி; போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத நடந்த லட்சுமி ஹயக்ரீவர் யாக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் 10 ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதவும், தேர்வு நேரங்களில் ஏற்படும் பயத்தை நீக்கும் வகையில் லட்சுமி ஹயக்ரீவர் யாக பூஜை கோயில் தக்கார் மாரிமுத்து தலைமையில் நடந்தது. ஏராளமான மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். லட்சுமி ஹயக்ரீவர் யாகம் பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில், கயிறு குங்குமத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.