பதிவு செய்த நாள்
19
பிப்
2024
03:02
அனுப்பர்பாளையம்; கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மன நோய் தீர்க்கும் திருதலமாகவும் திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டி திருமுருக நாதசுவாமி கோவில் விளங்குகிறது. கோவில் தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சுவாமியின் கொடியை எடுத்து, கோவிலுக்குள் பிரகார உலா வந்தர்,
வேத மந்திரங்கள் வாத்தியங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் பிரகார உலா, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. இதில், நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமுருக நாதசுவாமியை தர்சித்தனர். வருகிற 19 ம் தேதி மாலை சூரிய சந்திர மண்டல காட்சிகள், 20 ம் தேதி பூத வாகனம் சிம்ம வாகன காட்சிகள், 21ம் தேதி புஷ்ப விமான காட்சி, 22 ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகன காட்சி, 23 ம் தேதி திருகல்யாணம் யானை வாகன அன்ன வாகன காட்சிகள், ஆகியவை நடைப்பெறுகிறது. 24 ம் தேதி சனிக்கிழமை அதிகாலை திருமுருகநாதர் தருதேருக்கு எழுந்தருளல், அன்று மாலை 3:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைப்பெறுகிறது. 25 ம் தேதி மாலை 3:00 மணிக்கு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது. 26 ம் தேதி தெப்பதேர் விழா, 27 ம் தேதி சுந்தரர் வேடுபறி திருவிழா, 28 ம் தேதி பிரம்ம தாண்டவ தரிசன கட்சி, 29 ம் தேதி மஞ்சள் நீர் விழா, மயில்வாகன காட்சி ஆகியவற்றுடன் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.