உச்சபட்டி கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி சிலை பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2024 01:02
திருமங்கலம்; திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உச்சபட்டி கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் 3ம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமி சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று கால யாக சாலை பூஜைகளுக்கு பின்னர் நேற்று காலை 9 45 மணிக்கு கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடந்தது. மேலும் புதிதாக அமைக்கப்பட்ட 18-ஆம் படி கருப்பசாமி சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை உச்சபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.