தேவராயன்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் நூற்றாண்டு மாசி மக தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2024 02:02
அவிநாசி; தேவராயன் பாளையத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சியம்மன் கோவிலில் நூற்றாண்டு மாசி மக தேர்விழா 24ம் தேதி நடைபெறுகிறது.
அவிநாசி ஒன்றியம், தேவராயன்பாளையத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சியம்மன் கோவிலில் நூற்றாண்டு மாசி மக தேர்விழா நாளை நடைபெறுகிறது. முன்னதாக கடந்த 18ம் தேதி தேர் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்வாமி திருவீதி உலா வருதல், அபிஷேக ஆராதனை, திருவிளக்கு பூஜை, தீர்த்தக் காவடி, படைக்கலம் எடுத்தல் ஆகியவை நடைபெற்று வருகிறது. 24ம் தேதி விநாயகருக்கு 108 குடம் அபிஷேகம், கோ பூஜை, ஸ்ரீ காமாட்சி அம்மன் தேருக்கு எழுந்தருளல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து திருவீதிகள் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 25ம் தேதி வண்டி தாரை, பரிவேட்டை, 26ம் தேதி தரிசனம், மஞ்சள் நீராட்டு, 27ம் தேதி முத்துக்குமாரஸ்வாமிக்கு பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் நூற்றாண்டு மாசி மக தேர் விழா நிறைவு பெறுகிறது.