காளஹஸ்தி சிவன் கோயிலில் ஜெர்மனி பக்தர்கள் ;சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2024 03:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதோடு கோயிலில் நடக்கும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையிலும் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று வியாழக்கிழமை ஜெர்மனி நாட்டில் இருந்து ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு பக்தர்கள் வந்தனர். அவர்கள் கோயிலில் நடந்த ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து ஸ்ரீஞானப் பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசித்தனர்.