பதிவு செய்த நாள்
23
பிப்
2024
12:02
சிதம்பரம்; உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று காலை நாடாளுமன்ற நிலைக்குழுவைச் சேர்ந்த எம்.பி.,க்களான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பிரிஜ்லால் எம்.பி., தலைமையில் சத்யா பால் சீங், நிராஜ் சிக்கர், ராகேஷ் சிங்கா உள்பட 8 எம்.பி.,க்கள் நடராஜர் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். நடராஜர் கோவிலில் கீழ சன்னதி வழியாக கோவிலுக்கு வந்த அவர்களை கோவில் நுழைவுவாயிலில் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் தீட்சிதர்கள் எம்.பி.,க்கள், குழுவினரை கும்ப மரியாதை செய்து கோவிலுக்கு அழைத்து சென்றனர். அப்போது மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், எஸ்.பி.,ராஜாராம், சிதம்பரம் சப் கலெக்டர் ரஷ்மிராணி உட்பட அதிகாரிகள் உடனிருந்து வரவேற்றனர். எம்.பி.,க்கள் குழுவினர் கோவிலில் மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரையும் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தனர். பிறகு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எம்.பி.,க்கள் குழுவினர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றனர். எம்.பி.,க்கள் குழுவினர் வருகையை ஒட்டி சிதம்பரம் நான்கு முக்கிய வீதிகளிலும் ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.