பதிவு செய்த நாள்
26
பிப்
2024
05:02
சென்னை, வடபழனியில் உள்ள ஆதிமூலப்பெருமாள் கோயிலில், ஸ்ரீ வித்யா ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்றது.
பள்ளி பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் தேர்வில் வெற்றி பெறவும், படிப்பு ஞானம், மனோ தைரியம், ஞாபக சக்தி அதிகரிக்க, நல்ல பழக்க வழக்கங்கள் வளரவும் இந்த ஹோமம் நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு போன, புத்தகம் உள்ளிட்டவை சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்து தரப்பட்டது. மேல்படிப்புக்கு செல்வோர், வேலைவாய்ப்பு தோடுவோருக்காகவும் சிறப்பு யாகம் நடைபெற்றது. மாணவ, மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.