பதிவு செய்த நாள்
26
பிப்
2024
06:02
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் வடக்குராமலிங்க அக்ரஹாரம் சார்பில் ஆண்டுதோறும் ராதாகல்யாண மகோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டு 69ம் ஆண்டு ராதாகல்யாண மகோற்சவம் கடந்த 23ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை மூன்று நாட்கள் ஏவிசி திருமண மண்டபத்தில் நடந்தது. உடையாளுர் கல்யாணராமபாகவதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 23ம் தேதி கணபதி ஹோமம், விக்னேஷ்வரபூஜை, விஷ்ணுசகஸ்ரநாமபாராயணம், உடையாளூர் கல்யாணராமபாகவதர், மாயவரம் முத்துகிருஷ்ணபாகவதர், திருவண்ணாமலை பிச்சுமணிபாகவதர், செதலபதி பிருகாபாலசுப்ரமணிய பாகவதர், தேபெருமாநல்லூர் நரசிம்மபாகவதர், ஆய்க்குடி குமார் பாகவதர் மற்றும் பாகவதர் கேஷ்டியாரால் கீதகோவிந்தம் தொடங்கியது. மாலை அஷ்டபதி பஜனையும், சாரதாராகவ் குழுவினரின் பக்தி பாடல்களும், ஸ்கந்தபிரசாத் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும், 24ம் தேதி உஞ்சவிருத்தி, கணேஷ்குமார் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும், இரவு உடையாளூர் கல்யாணராம பாகவதர் தலைமையில் அபிநயஅலங்கார திவ்யநாம பஜனை நடந்தது. நிறைவுநாளான நேற்று 25ம் தேதி அஷ்டபதிபஜனை, திவ்யநாம பஜனை, மதியம் பாகவதர்கள் கவுரவித்து விருது வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 1.35 மணிக்கு ஸ்ரீ ராதாகல்யாண மகோற்சவம் நடைபெற்றது. மாலை ஸ்ரீரஞ்சனிசந்தான கோபாலன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும், இரவு விசாகாஹரி குழுவினரின் சங்கீத உபன்யாசமும், இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் ஆசிவை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வடக்குராமலிங்க அக்ரஹாரம் ராதகல்யாண டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.