பதிவு செய்த நாள்
29
அக்
2012
11:10
திருநெல்வேலி:பாளை., தியாகராஜநகர் சாரதாம்பாள் கோயிலில் சரந் நவராத்திரி மஹோத்ஸவ விழாவில் நவ சண்டிஹோமம் நடந்தது.பாளை., தியாகராஜநகர் சாரதாம்பாள் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. தினந்தோறும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், லட்சார்ச்சனை, தேவி மகாத்மியம் பாராயணங்களும், வேத பாராயணங்களும் நடந்தது.நேற்று காலை அம்பாளுக்கு சிறப்பு பூஜை, நவசண்டி ஹோமம் நடந்தது.நவசண்டி ஹோமத்தை ராமசாமி வாத்யார் தலைமையில் வித்யாசங்கர சிவாச்சாரியார், மணிகண்டன் வாத்யார், கோபாலகிருஷ்ணன் வாத்யார் குழுவினர் நடத்தினர்.தொடர்ந்து சுபாஷினி பூஜை, கன்யா பூஜை நடந்தது.நிகழ்ச்சியில் டாக்டர் சிவராமகிருஷ்ணன், தர்மாதிகாரி நடராஜன் ஐயர், ஆடிட்டர் ராமகிருஷ்ணன், காசிவிஸ்நாதன், பாம்பே கணேஷ் மணி, ஆஸ்தீக சமாஜம் எஸ்.வி.எஸ்.மணி ஐயர், ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சிருங்கேரி மடம் நிர்வாக அதிகாரி வி.ஆர்.கவுரிசங்கர் அறிவுரையின் பேரில் சங்கர கேந்திரா மற்றும் சிருங்கேரி மடம் பக்தர்கள் செய்திருந்தனர். நெல்லையில் இன்று நவசண்டி ஹோமம்தியாகராஜநகரில் இன்று (29ம் தேதி) காலை 9.30 மணிக்கு சாரதாம்பாளுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி லட்சார்ச்சனையும் சமாப்தியும் நடக்கிறது.நெல்லை ஜங்ஷன் சிருங்கேரி சாரதா மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள சாரதாம்பாள் கோயிலில் இன்று (29ம் தேதி) காலை 9 மணி முதல் நவ சண்டி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.