Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதிலமடைந்த வாஞ்சிஸ்வரர் கோவில் ... அயோத்தியில் குவியும் பக்தர்கள்; வழிகாட்டுதலை வெளியிட்ட கோயில் நிர்வாகம் அயோத்தியில் குவியும் பக்தர்கள்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாலி பாக்யம் காத்திடும் காரடையான் நோன்பு; அம்மனே சொன்ன பெண்களுக்கான பிரத்யேக விரத முறை!
எழுத்தின் அளவு:
தாலி பாக்யம் காத்திடும் காரடையான் நோன்பு; அம்மனே சொன்ன பெண்களுக்கான பிரத்யேக விரத முறை!

பதிவு செய்த நாள்

13 மார்
2024
03:03

இந்த நோன்பில் மிக முக்கியமான விஷயம் சாவித்திரி பாடம். அதாவது சத்யவான் சாவித்ரி கதையினைப் படிப்பது, கேட்பது, சொல்வது அவசியம். பொதுவாக மூத்த சுமங்கலிகள் இதனைச் சொல்ல, மற்றவர்கள் சிரத்தையாகக் கேட்பார்கள். இந்தக் கதை, கர்ண பரம்பரையாக ஆதரிக்கப்பட்டு இன்றும் உயிரோடிருக்கும் பாட்டுக்களுள் ஒன்று. சாவித்திரி நோன்பு, கவுரி நோன்பு என்றெல்லாம் சொல்லப்படும் காரடையான் நோன்பினை மாசியும் - பங்குனியும் கூடும் வேளையில் செய்ய வேண்டும். வட சாவித்திரி நோன்பென்ற பெயரில் இது நம் நாட்டின் வடபகுதிகளிலும் கூட அனுசரிக்கப்படுகிறது. அங்கெல்லாம் மரத்தைச் சுற்றி வந்து நூல் கட்டி வழிபடும் வித்தியாசமான வழக்கம் காணப்படுகிறது.

இதற்கு நைவேத்யம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடையே. அந்த காலத்தில் வாணலியின் அடியில் வைக்கோலைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி, மேலே தட்டில் அடையை வைத்து வேக வைப்பார்கள். இதற்கு இரு காரணங்கள் உண்டு. அது என்னவெனில் நெல், கதிரிலிருந்து பிரியும் வரை அதனைக் காப்பது வைக்கோல். அதுபோலவே என் வாழ்வு முடிவு வரை கணவரும் உடன் வர வேண்டும் என்பது, ஒன்று. அடுத்தது, கொடிய மிருகங்கள் நிறைந்த காட்டில் இருக்கும்போது, சத்தியவான் உடலிலிருந்து உயிர் பிரிந்துவிட்டது. உடனே சாவித்ரி, சத்யவான் உடலை வைக்கோலால் சுற்றி, “நான் என் இவரது உயிரை மீட்டுக்கொண்டு வரும்வரை இவ் உடலைக் காத்திரு!” என்று சொல்லி மூடிவிட்டுப் போனாள் சாவித்திரி. அதன் அடையாளமாகவே அடைவேகும் பாத்திரத்தின் கீழே வைக்கோல் போடுகிறோம். வெல்லம் சேர்த்த அடைதான் பிரதானம் என்றாலும் உப்புப் போட்ட அடையையும் வழக்கத்தில் வந்துவிட்டது!

பூஜை முறை: பூஜை அறையில் விளக்கேற்றி, கோலம் போட்டு வைக்க வேண்டும். சுவாமிக்குப் படைப்பதற்கான இடத்தில் பெரிதாகக் கோலம் போட்டு, அதன் மீது நுனி இலையினைப் போட்டு (முழு இலை அவசியம் இல்லை) வைக்க வேண்டும். வீட்டில் உள்ள சுமங்கலிகள், பெண் குழந்தைகளுக்கு ஏற்ற எண்ணிக்கையில் (இரட்டைப் படையில் போடுவது நல்லது, ஒற்றைப்படையில் இருந்தாலும் கூடுதலாக ஒன்றினை சாவித்ரியை நினைத்துப் போடலாம்) தனித்தனிக் கோலம் சிறிய அளவில் போடவேண்டும். கோலங்களுக்கு மேலே சிறு துண்டுகளாக நுனி இலை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சுவாமி இலையில் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் சரடு (மஞ்சள் சரடில் பூ இதழ் நடுவில் கட்டியது) ஆகியவற்றை மேல்பகுதியில் வைத்து, இலையின் நடுவில் வெல்ல அடையையும், வெண்ணெயையும் வைக்க வேண்டும்.

பின்னர் எல்லா இலைகளிலும் அதே போல் வைக்க வேண்டும். முதிர்ந்த சுமங்கலி தன் இலையில் அம்மனுக்கு ஒரு சரடு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று இலையாகப் போடக்கூடாது. எனவே குறைந்தது நான்கு இலைகளாகப் போட்டு பூஜிக்க வேண்டும். அம்மனுக்கு உகந்த துதிகள் சொல்வது, சத்யவான் சாவித்ரி கதையை பாராயணம் செய்வது போன்றவற்றுக்குப் பிறகு, மாங்கல்யம் நிலைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு, தூப, தீப ஆரத்திகள் காட்டிவிட்டு, நிவேதனம் செய்யும் விதமாக முதலில் அம்மனுக்குப் போட்டுள்ள இலையைச் சுற்றி சிறிது நீரை விடவேண்டும். அதன் பிறகு அவரவர் இலைகளை நீரால் சுற்றி நைவேத்தியம் செய்து மங்கள தீபாராதனை காட்ட வேண்டும். பிறகு வயதில் மூத்த சுமங்கலி, அம்மனை வேண்டிக் கொண்டு அம்மனின் படத்திற்கு ஒரு சரடினை சாத்திவிட்டு, தான் ஒன்றை எடுத்து கழுத்தில் கட்டிக்கொண்டு, பின் தன் குடும்ப இளைய பெண்களுக்குக் கட்டிவிட்டு, ஆசிர்வாதம் வழங்கவேண்டும். (பொதுவாக இந்த விரதத்தின்போது காமாட்சி அம்மன் படத்தை வைத்து பூஜை செய்வார்கள் என்பதால், இதற்கு காமாட்சி விரதம் என்றும் பெயர் உண்டு)

நோன்பு ஆரம்பித்தது முதல் முடியும் வரை தீபம் ஒளிர்தல் மிகவும் விசேஷமாகும். மாசி மாதம் முடியும் முன் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். உடல்நலம் குன்றியவர்கள். கர்ப்பிணிகள், குழந்தைகள் தவிர மற்ற சுமங்கலிகள் நோன்பு (காலம்) நேரம் முழுவதும் உபவாசம் இருந்து அடை நைவேத்யத்தையே பலகாரம் செய்ய வேண்டும். வேறு உணவு வகைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனால் மாங்கல்ய பலம் பெருகும். மற்றவர்கள் எளிய பலகாரம், பால், பழம் சாப்பிடலாம். நோன்பு நோற்றபின்னும் அந்த நாள் முழுக்க பெண்கள் அடைதான் சாப்பிடலாம். அன்றைய தினம் சில அடைகளை எடுத்து பத்திரமாக வைக்க வேண்டும். மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் தெய்வத்தைக் கும்பிட்டுவிட்டு, பிறகு அந்த அடைகளை எடுத்துச் சென்று பக்கத்தில் அல்லது அவரவர் வீட்டில் பசு இருந்தால் அதற்குத் தந்துவிட்டு, வலம் வந்து வணங்க வேண்டும். அப்படி வலம் வரும் சமயத்தில், ‘மலை ஏறிப் புல் மேய்ந்து மடு இறங்கி நீர் பருகும் கோமாதாவே, என் தாலி பாக்யம் என்றைக்கும் நிலைக்கும் வரம் எனக்குத் தா!’ என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு வீடு திரும்பி அவரவரது வழக்கப்படியான வேலைகளில் ஈடுபடலாம். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், மணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும். கன்னியர்க்கு மனம்போல மாங்கல்யம் அமையும். இந்த விரதத்தை காமாட்சி அம்மனே சாவித்ரிக்குச் சொன்னதாகவும் ஒரு புராணக் கதை உண்டு.  அம்மனே சொன்ன பெண்களுக்கான பிரத்யேக விரதம் ஆகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நவராத்திரி திருவிழா, அக்., 3ல் காப்பு ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் பிரதான நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று வெகு ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நவராத்திரியின் இறுதி நாளான நேற்று, 30 அடி மகிஷா சூரன் வதம் செய்து பட்டாசு ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன், நவராத்திரி பெருவிழாவின் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar