Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ... பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவக்கம் பழநி முருகன் கோயிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி வருகை; வரும் 20ல் விஜய யாத்திரை வரவேற்பு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி வருகை; வரும் 20ல் விஜய யாத்திரை வரவேற்பு விழா

பதிவு செய்த நாள்

18 மார்
2024
11:03

காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பின், நாளை மறுதினம், காஞ்சிபுரத்திற்கு வரும், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, விஜய யாத்திரை வரவேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இதுகுறித்து சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், மடத்தின் நிர்வாகி கீர்த்திவாசன், மடத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கலைராம வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது: காஞ்சிபுரம் காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 2022 மார்ச் மாதம் விஜய யாத்திரை புறப்பட்டு, ராமேஸ்வரம், ஆந்திரா, தெலங்கானா, காசி, உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு விஜயம் செய்தார். அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி கும்பாபிஷேகம் மற்றும் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்று அருளாசி வழங்கினார். ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் ஜோதிர்லிங்க க்ஷேத்திரமான மல்லிகார்ச்சுன சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார். திருப்பதியில், சந்திர மவுலீஸ்வர பூஜை செய்து கொண்டு, அதன் தொடர்ச்சியாக விஜய யாத்திரை புரிந்து, வரும் 20ல் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வருகிறார். சுவாமிகளுக்கு காஞ்சி சங்கர மடம், காஞ்சி நகர வரவேற்பு கமிட்டி சார்பிலும், நகரவாசிகள், பல்வேறு ஆன்மிக அமைப்புகள், திருக்கோவில் சார்பிலும் விஜய யாத்திரை வரவேற்பு விழா, நாளை மறுதினம், பெரிய காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் அருகில், மாலை 5:00 மணியளவில் நடைபெற உள்ளது. அப்போது, பல்வேறு திருக்கோவில்களில் பிரசாதங்களுடன் பூரண கும்ப மரியாதை, மங்கல வாத்தியங்கள் முழங்க, ஸ்ரீபெரியவர்களுக்கு பிரமாண்டமான வரவேற்பும், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பெரியவர்கள் நகர பவனி ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து சங்கர மடத்தில், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளுரையும், பிரசாதமும் வழங்குவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar