காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவ விழா நிறைவாக பரிகார பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2024 11:03
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் நேற்று17ம் தேதி கோயிலில் நடந்து முடிந்த மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கோயிலுக்கு வரும் பக்தர்களோ, உற்சவத்தை நடத்திய வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள், கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் யாரேனும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை மன்னித்து அருள வேண்டும் என்று கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவமூர்த்திகள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் , ஸ்ரீ - சிலந்தி, காள - பாம்பு , ஹஸ்தி - யானை மற்றும் பரத்வாஜ் முனிவரின் உற்சவ சிலைகளுக்கு கோயில் வேத பண்டிதர்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். முன்னதாக கோயில் அலங்காரம் மண்டபம் அருகில் சிறப்பு கலச ஏற்பாடுகள் செய்து கலச பூஜைகளை வேத பண்டிதர்களால் செய்யப்பட்டன. யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து கலசத்தில் உள்ள புனித நீரை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். இதில் கோயில் செயல் அதிகாரி நாகேஸ்வர ராவ் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.