அயோத்தி ராமர் கோவிலில் ஹோலி விழா; பால ராமருக்கு வண்ண பொடிகளை பூசி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2024 10:03
அயோத்தி; அயோத்தி, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், ராமர் ஐந்து வயது பாலகனாய் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு முதல்முறையாக இன்றும், நாளையும் ஹோலி பண்டிகை பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. கோவிலில் பால ராமருக்கு வண்ண பொடிகளை பூசி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். கடந்த ஜன., 22ம் தேதி திறப்பு விழா போன்று ஹோலி பண்டிகையும் பிரமாண்டமாக நடத்தப்படும் என கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். விழாவில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.