உஜ்ஜைனி ; சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோவிலும் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மகோத்பலா சக்தி பீடம் ஆகும். சிறப்பு மிக்க இத்தலத்தில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில் கோவில் கருவறையில் பஸ்ம ஆரத்தி நடத்தப்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து பூசாரிகள் மற்றும் நான்கு பக்தர்கள் தீக்காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட அதிகாரி நீரஜ் குமார் சிங் தெரிவித்தார். தீ உடனடியாக அணைக்கப்பட்டது.