மாதேஸ்வரர் கோயில் திருவிழா: பாரம்பரியம் மாறாமல் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2024 01:03
கூடலூர்; கூடலூர், நந்தட்டியில் உள்ள பழமையான ஸ்ரீமாதேஸ்வரர் கோவில் திருவிழா நேற்று காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு 10:00 மணிக்கு ஜம்மக்காரர் (பூசாரி) வீட்டில் குலதெய்வ பூஜையும், ஸ்ரீமாதேஸ்வரரை வணங்கி பூஜை செய்தனர். தொடர்ந்து, இன்று காலை 10:30 மணிக்கு, ஜம்மக்காரர் வீட்டிலிருந்து மாதேஸ்வரரின் சில்லானம் ஆபரணங்கள், பழங்குடியினர், செண்டை மேளம் இசையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுடன் பக்தர்கள் பாரம்பரிய படுக நடனமாடியும் பங்கேற்றனர். காலை 11:30 மணிக்கு கணபதி ஹோமம் நிகழ்ச்சியும், நடந்தது தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை காலை 5:00மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகளும், மாலை சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும. இரவு 7:00 மணிக்கு வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை குலதெய்வ ஆபரணங்கள் மேளதாளத்துடன் மீண்டும் ஜம்மாக்காரர் வீட்டுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.