பதிவு செய்த நாள்
25
மார்
2024
01:03
தொண்டாமுத்தூர்; கோவையில், பா.ஜ., மாநில தலைவரும், கோவை லோக்சபா தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
தமிழகத்தில், வரும், ஏப்., 19ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதில், கோவை லோக்சபா தொகுதியில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இன்னும், இரு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், அண்ணாமலை, நேற்று பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், அண்ணாமலைக்கு சால்வை அணிவித்து, மலர் கிரீடம் சூட்டி, ஆசி வழங்கினார். தொடர்ந்து, ஆதின மடத்தில் உள்ள நடராஜர் சன்னதி மற்றும் சாந்தலிங்க சுவாமி சன்னதியில் வழிபாடு நடத்தினார். அதன்பின், சிறிது நேரம், ஆதினத்துடன் கலந்துரையாடி புறப்பட்டு சென்றார்.