மகனின் திருக்கல்யாணம் காண வந்த மீனாட்சி, சுந்தரேசுவரர்; எதிர் சென்று அழைத்து சென்ற திருப்பரங்குன்றம் முருகன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2024 10:03
மதுரை; திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் நேற்று (மார்ச் 27) சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. பங்குனித் திருவிழாவின் மூக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று (மார்ச். 28) நடக்கிறது. இதற்காக இன்று அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையிடன் சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். திருப்பரங்குன்றம் கோவிலிலிருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு பசுமலை மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு வந்து, மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் கோவிலுக்கு சென்றனர். அங்கு இன்று பகல் 12.30 மணிக்கு மேல் முருகப்பெருமான், தெய்வானைக்கு திருக்கல்யாண ம் விமரிசையாக நடைபெற உள்ளது.